*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது பரிசுத்த வாழ்க்கை என்றும், சில ஆகாரங்களை ஒதுக்கினால் பரிசுத்தம் என்றும் சில பிரிவினர் சொல்வதைக் கடைபிடிக்கிறவர்கள் உண்டு.
திருமணம் ஆகாதவர்களை வாலிபர், கன்னிகை என்று சமுதாயம் அழைக்கும்.. ஆனால் இத்தகையவர்கள் வயதில் மூப்போ, இளமையோ எப்படியாயினும் அவர்களை அம்மா அப்பா (Mother, Father) என்ற கவுரவ சமுதாய பதவி உயர்வு பெற்றுவிடுகின்றனர்.
வேதாகமத்திலோ, 1தீமோ. 4:1-3ம் வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின முதலாம் நிருபத்தில் சொன்ன சில வரிகள் – நெருடுகிறது !!
தெளிவாய் வேதாகமம் சொன்னாலும் தனக்கு பிடித்த கொள்கையில் இருந்தால், கிறிஸ்து வரும்போது என்னவாகும்?
பணத்திற்காக அல்ல, கவுரவத்திற்காக அல்ல, வேலைக்காகவும் அல்ல, தேவனுடைய திட்டத்திற்கு எதிர்த்து நிற்காமல்,
சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து,
அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து,
சத்தியத்தில் நிலைத்து நிற்கும்படியாக,
தங்கள் தங்கள் நடவடிக்கையும், கொள்கையும், வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக