#1084 - *தேவனுடைய பார்வையில் மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என்று சொல்லப்பட்டிருக்க ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்? என்று கேட்க காரணம் என்ன*?
*பதில்* : அவர் இருந்த இடம், அல்லது அவர் என்ன செய்தார், அல்லது அவர் இருந்த சூழ்நிலைகள் அல்லது அவர் அளிக்கும் பதில்களைப் பற்றி சர்வவல்ல தேவன் அறியாதவர் அல்ல. மாறாக, அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்தார், எந்த நிலையில் இருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதையும், எனவே தன்னை மறைக்க முற்படுவது வீணானது என்பதையும் இது காட்டுகிறது.
அல்லது அவரது செயலின் முடிவை முன்னிலைப்படுத்தி,
“தேவனுக்கு கீழ்ப்படியாமல் நீ ஏன் இப்படி ஒரு மோசமான அவலநிலையைக் கொண்டு வந்தாய்! பரலோகத்தின் விருப்பமான நீ, உயிரினங்களின் தலைவன், ஏதேன் குடிமகன், விரும்பத்தக்க ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றிருக்கிறாய், ஆனால் இப்போது கற்பனைக்கு எட்டாத மிக மோசமான மற்றும் மோசமான நிலையில்; பாவத்தாலும் முட்டாள்தனத்தாலும் கீழ்படியாமையினாலும் விழுந்துபோனாயே… நீ எங்கே இருக்கிறாய்? என்ற அர்த்தமும் கொள்ளமுடியும் !!
ஆதாமே, நீ தேவனோடு இருக்கிறாயோ? அல்லது வெளியேறிவிட்டாயோ என்று அவனிடமே ஒரு தன்னிலை விளக்கத்திற்கான ஒரு கேள்வியாகவும் இருக்கலாம்.
ஆபேல் காயீன் சம்பவத்திலும் இந்த கூற்றை அறியலாம்.
ஆதி. 4:9-11 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
புதிய வீடு கட்டி அதனுள் கடவுளுக்கென்று தனி ஸ்பெஷல் அறையை கட்டி உள்ளே அவரை பத்திரமாக பூட்டி வைத்து பாதுகாத்து, வேண்டிய நேரம் திறந்து கும்பிட்டுக்கொள்வதற்கு அவர் விக்கிரகமோ, சிலையோ அல்ல… ஆவியான தேவன். சர்வத்தையும் அறிந்தவராயிற்றே..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஞாயிறு, 14 மார்ச், 2021
#1084 - தேவனுடைய பார்வையில் மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என்று சொல்லப்பட்டிருக்க ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்? என்று கேட்க காரணம் என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக