*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சிட்சிக்கும் தேவனாகிய பராக்கிரமம் நிறைந்த வல்லமையுள்ள நம் தேவனுடைய நாமத்திற்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக.
ஒருவன் *மறுபடியும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து. (யோ. 3:3)
ஒருவன் *ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் மறுபடியும் (யோ. 3:5)
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, *மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்* நம்மை இரட்சித்தார். (தீத்து 3:5)
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் *பெற்றவன்* இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (மாற்கு16:16)
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்று பவுலினிடம் அனனியா துரிதப்படுத்தினார் (அப். 22:16)
எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று அன்றே இயேசு கிறிஸ்து “மெய்யாகவே மெய்யாகவே” என்று திரும்ப திரும்ப ஊர்ஜீதபடுத்தி சொல்லியிருக்கிறார் போலும் !!
தன் கையை கூட நான் வெட்டிக்கொள்வேனேயன்றி, ஞானஸ்நானம் ஒரு போதும் எடுத்துக்கொள்ளவே மாட்டேன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு பலரது மனதில் விசுவாச விரோதமானது வைராக்கியமாகிவிட்டது...
(பாவமன்னிப்பிற்கென்று) ஞானஸ்நானம் எடுத்தாலன்றி தேவ ராஜ்ஜியத்தை கானமுடியாதென்று வேதாகம் தெளிவுபடுத்தியுள்ளது....
இதை எடுத்து சொல்கிற மனுஷன் குற்றஞ்சாட்டப்பட்டால் அந்த மனுஷன் பாக்கியவான் (1பேது. 3:14-17, கலா. 4:16) இந்த பாக்கியத்தை நான் சில குடும்பங்களிலிருந்து பெற்றிருக்கிறேன். ஆனாலும், என்றாவது ஒருநாள் அவர்களும் இரட்சிப்பிற்குள் வரும்படியாக என் நினைவில் வரும்போதெல்லாம் ஜெபிக்கிறேன்... உங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன் என்று சொல்லும் பழக்கம் எனக்கில்லை !!
சத்தியத்திற்கு கீழ்படியத்தக்கதாக, கண்களையும் மனதையும் தேவன் தாமே திறப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக