#1081- *கழுதை குட்டி என்றும் கழுதையின் மேல் என்றும் உள்ள இந்த முரண்பாட்டை விளக்கவும்*. மத்தேயு 21:4ல் கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிப்போனார் என்றுள்ளது. ஆனால், யோவான் 12:14ல், உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறது.
*பதில்* : சகரியா தீர்க்கன் மூலம் இந்த வார்த்தை இஸ்ரவேலர்களுக்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது.
வசனங்களை பட்டியலிட்ட பின்பு விபரங்களை காண்போம்.
சகரியா 9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
மத்தேயு 21:4-5 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
மாற்கு 11:4-7 அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
லூக்கா 19:32-35 அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
யோவான் 12:14-15 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
நாம் கவனிக்கவேண்டிய முதலாவது காரியம்:
மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒரே ஒரு கழுதை மட்டுமே இயேசுவுக்காகப் பெறப்பட்டதாகவோ அல்லது ஒரே ஒரு கழுதை மட்டுமே இயேசுவோடு எருசலேம் வரை பயணித்ததாகவோ சொல்லவில்லை.
எழுத்தாளர்கள் ஒரு எண்ணிக்கையை மாத்திரமே குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு கழுதை (குட்டியின் தாய்) இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.
மாற்கு, லூக்கா மற்றும் யோவான் தங்கள் எழுத்துக்களில் “ஒரு குட்டிக் கழுதையைக்” குறிப்பிடுகிறார்கள் என்பதால் இரண்டாவது அங்கு இல்லை என்றாகிவிடாது.
மத்தேயுவின் எழுத்திற்கும் மற்ற மூவரின் எழுத்திற்கும் ஒரு வேறுபாடு உள்ளதை கவனியுங்கள். மத்தேயு மாத்திரமே சகரியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி எழுதுகிறார். சகரியாவில் சொல்லப்பட்டது தாயும் குட்டியும் சேர்த்து சொல்லப்பட்டதாகையால், தன் எழுத்தில் விபரமாக இரண்டையும் குறிப்பிட்டிருக்கவேண்டும்.
மற்றவர்களோ, இயேசு ஏறிச்சென்ற கழுதையின் அவசியத்தை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துவுக்காக அவர்கள் வாங்கிய கழுதையானது ஒருபோதும் எவரும் சவாரி செய்யப்படாத கழுதை என்கிற தகவலை மாற்கு மற்றும் லூக்கா சுட்டிக்காட்டினர். இந்த தகவலை மத்தேயு தரவில்லை.
பழக்கப்பட்ட கழுதையும் (தாய் கழுதை) ஒருவரும் ஏறியிராத கழுதையும் என்ற இந்த கருத்தை சில வேத அறிஞர்கள் கற்றறிந்த யூதர்களுக்கும், பிரமாணத்தை அறியாத புறஜாதியையும் ஒப்பிடுவதாக சொல்கிறார்கள். அதற்கான வேத ஆதாரம் இல்லை.. ஒரு ஒப்பனையே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைபதிவுதளம்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக