ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 21 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

நமது பிரயாசத்தின் பலனை நமக்கு அளிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எவ்வளவு தான் உண்மையாக இருந்தாலும்,

அநியாயம் பண்ணுகிறவன் தான் செழிப்பாய் வாழ்கிறான் என்று ஒரு நாளும் நாம் நினைத்து விட வேண்டாம்.

 

தேவனைச் சேவிப்பதும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதிலும் என்ன பிரயோஜனம்? அகங்காரிகளைப் சுகமாய் வாழ்கிறார்கள், தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் விரோதிதாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று இஸ்ரவேலர் சொன்னபோது கர்த்தர் கடிந்து கொண்டார். (மல். 3:13-15)

 

சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் / அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல். 4:1

 

ஆகவே நாம் உபத்திரவத்தில் பொறுமையாய் இருப்போம்.

 

கர்த்தர் சொல்கிறதாவது :

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி 3:8

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+968 93215440

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக