*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சத்தியத்தின் தேவனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சொந்த கம்பெனிக்காரனே திணறி போகும் அளவிற்கு,
எது ஒரிஜினல் என்று கண்டு பிடிக்கமுடியாத டூப்ளிகேட் பொருட்கள் கிடைக்கிறது.
அவ்வாறே கிறிஸ்தவம் என்கிற பெயரில் அநேக கோட்பாடுகளும் இந்நாட்களில் மாறிப்போனது.
யார் உண்மையை சொல்கிறார்கள்,
யார் தவறானவர்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒருவரை மற்றவர் மிஞ்சி,
வேதாகமத்திலிருந்து அநேகரை பக்கவாட்டில் இழுத்துவிட்டாயிற்று.
என் பிதா நடாத நாற்றெல்லாம் பிடுங்கபடும் என்றார் கிறிஸ்து. மத். 15:13
*என்னில் நிலைத்திராத* கொடி எதுவோ அது வீணாக போகும் என்றார் இயேசு. யோ. 15:4
வீணானது கடைசியில் *அக்கினியில்* போடப்படும் – யோ. 15:6
*அக்கினி, அக்கினி என்று அழிவை தேடாமல்* ஆசீர்வாதத்திற்கான கீழ்படிதலை தேட வேண்டும்.
சத்தியத்தை விட்டு,
சுய பிரியமான ஆராதனையில் இஷ்டம் கொள்ளாமல்,
கிறிஸ்துவை பின்பற்றுவது மிகவும் கடினம் தான்.
ஆனால் சத்தியமே பரலோகம் கொண்டு செல்லும் – 2தீமோ. 3:12
மனுஷனை அல்ல, கேட்கும் பிரசங்கத்தை,
வேதாகமத்தோடும் நம் வாழ்க்கையோடும் ஒப்பிட்டு பார்த்தால்
நேர்த்தியானது வாய்க்கும்.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். எபே 5:15-17
தன் சீஷர்களை இயேசு கிறிஸ்து ஜனங்களுக்குள்ளே அனுப்பும் போது : ஓநாய்கள் மத்தியில் அனுப்புகிறேன். வினாவுள்ளவர்களாகவும் கசப்பற்றவர்களாகவும் இருக்க சொன்னார். *ஜனங்களை ஆதாயபடுத்த நமக்கு இந்த இரண்டும் மிக மிக மிக அவசியம்*. மத். 10:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக