வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

#1078 - யாரிடம் பாடுகிறோம்?

#1078 - *யாரிடம் பாடுகிறோம்?*

*பதில்* : நிகழ்நிலை தேவ வகுப்பின் (Online Bible Study) 14ம் பாடத்தில் ”யாரிடம் ஜெபிக்கிறோம்” என்ற தலைப்பை தொடர்ந்து ஒரு சகோதரன், யாரிடம் பாடுகிறோம் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

தொழுகையில், ஐந்து பகுதி என்பதைக்காட்டிலும் ஐந்தும் தனித்தனியே தேவனுக்கு ஏறெடுக்கும் தொழுகை. ஒவ்வொரு பாகமும் தனித்தன்மை வாய்ந்தது.

எந்த ஒரு பாடலும், நான்கு பங்குகள் உள்ளடக்கியுள்ளது.
வெளித்தோற்றம் அல்லது புறஅமைப்பு,
கோட்பாடு,
புரிதல் மற்றும்
அணுகுமுறை.

வெளித்தோற்றம் அல்லது புறஅமைப்பு எனும்போது, அவை கேட்பவருக்கு இனிமையாக, உற்சாகமூட்டும்படி, உணர்வுகளைத்தூண்டும்படியான வகையானது.

கோட்பாடு எனும்போது, கிறிஸ்தவத்தில், சத்தியத்திற்குட்பட்ட கோட்பாடுகளுடன் பாடும் பாடலானது தேவனிடத்தில் அங்கீகாரம் பெறுகிறது.

புரிதல் எனும்போது, வார்த்தைகள் அர்த்தமுடன் இருப்பது அவசியப்படுகிறது. 1கொரி. 14:15

அணுகுமுறை எனும்போது, தொழுகையில், தேவனால் நமக்கு முறைப்படுத்தப்பட்டவாரே செயல்படுத்துவது அவசியப்படுகிறது.

பவுல் அப்போஸ்தலன் கொலோசே பட்டணத்து சபையாருக்கு எழுதும்போது உள்ள கருத்துக்களை அதிகாரம் 3:16-17ல் கவனிக்கலாம்.

நானறிந்து, புதிய ஏற்பாட்டில் 11 இடங்களில் பாடலை குறித்து கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.  மத். 26:30; மாற்கு 14:26; ரோமர் 15:9; 1 கொரி 14:15; எபே. 5:19; கொலோ. 3:16; எபி.2:12; யாக்.5:13; வெளி. 5:9; 14:3; 15:3.

ஒருவருக்கொருவர் போதித்து அறிந்து, கர்த்தரை குறித்து  பாடி அறிந்து, புரிந்து, பிதாவாகிய தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.  கொலோ. 3:16-17
பிதாவிற்கு நன்றி ஏறெடுக்கப்பட்டது. மத். 26:30, எபே. 5:19-20

தொழுகையானது, பிதாவை நோக்கி ஏறெடுக்கப்படுகிறது. மத் .4:10
கிறிஸ்துவானவர், மாம்சத்தில் வந்த தேவன். 1யோ.4:2, 1தீமோ. 3:16
கிறிஸ்துவானவர், ஆராதிக்க பாத்திரரானவர் என்பதை நாம் மறக்ககூடாது. மத். 8:2, 9:18, 14:33, 15:25, 20:20, 28:9, 17, லூக். 24:52, யோ. 9:38

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக