செவ்வாய், 5 ஜனவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 5 Jan 2021

 


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

உன்னதங்களில் வாசம் செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வர வேண்டிய ஆசீர்வாதம், அல்லது விடுதலையை;
தீர்க்கதரிசனமாக உத்திரவாதமளிக்கப்பட்டு இருந்த போதிலும்,
காலம் நெருங்கிவிட்டது என்று கணக்கிட்டு அறிந்த போதும்,  ஜெபிக்கும் போது தானியேல்,
தேவனிடத்தில் தன் *மீறுதளுக்காக மன்னிப்பு கோரினார்*. தானி. 9:2-10

ஜெபிக்கும் போது எப்போதும் தேவனிடத்தில் *நம்மை தாழ்த்த வேண்டியது அவசியம்*.
தேவனுக்கே கற்றுக் கொடுப்பது போல,
ஜெபத்தில் பிரசங்கம் செய்ய கூடாது.
ஏற்றத்தாழ்வோடு குரலை ஜோடித்து,
வசனங்களை அடுக்கி,
'ஓ'வென்று கத்தி கூப்பாடு போட்டு, (1இரா.18:27)
உரத்த சப்தத்தில் ஜெபிக்கவேண்டிய அவசியமில்லை. (பிர. 5:2; மத். 6:7)
நம்மை உண்டாக்கினவர் அவர். சங். 95:6
நாம் மண் என்பது அவருக்கு தெரியும். சங். 103:14
அடக்கத்துடன், அமைதலுடன், தேவாதி தேவனிடத்தில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து பயபக்தியோடு அவரிடம் நாம் *வேண்டுவது* அவசியம்.

டிமான்ட் பண்ணுவது அல்ல, வேண்டுகிறோம் அல்லது கெஞ்சுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவும் !! ஜெபம் என்றால் வேண்டுதல் !!

அவசியத்திற்கு கடமைக்காக, வேகம் வேகமாக ஜெபித்து விட்டு ஓடி விட கூடாது.

விண்ணப்பங்களின் பலனை பெற்றுக்கொள்ள துதியும், ஸ்தோத்திரங்களும் சேர்ந்து சமர்பிக்க வேண்டும் (பிலி. 4:6)

தாழ்மையுடன், வேண்டுதலுடன், கீழ்படிதலுடன் ஏறெடுக்கும் ஜெபம் அவருடைய கிருபையை பெற்றுத்தரும். எஸ்றா 10:1, யாக். 4:8; 4:10; 5:16; 1யோ.3:22; 5:14-15

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக