புதன், 20 ஜனவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 20 Jan 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கூனிக்குறுகி இரகசியமாக சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், “விவாகரத்து” என்பதை வெளிப்படையாக சொல்வது இப்போது நாகரீகமாகி விட்டது.

*ஒருவர் உயிரோடு இருக்கும் போதே*,
*விட்டு பிரிந்தவர்*,
*வேறொரு திருமணம் செய்தால்*,
அவரை *“விபசாரக்காரர்”*
என்று வேதம் சொல்கிறது. ரோமர்7:3, மாற்கு 6:11-12

வேசித்தனத்தில் பிடிபட்ட காரணத்தை தவிர வேறு எவரும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து செல்ல அனுமதி இல்லை. மத்.19:9

மிகவும் விசனபடுத்தக்கூடிய கஷ்டமான வார்த்தை தான் (மத்.19:11) – ஆனால், இதுவே என்றென்றும் மாறாத நியாயந்தீர்க்கும் பரலோக சட்டம்.

தேவனுடைய வார்த்தை உருவ குத்துகிறதும் சீர்படுத்துகிறதுமாய் இருக்கிறது.

நித்திய ஜீவனை இழந்து போவதைக்காட்டிலும், வாழ்க்கைத் துணையின் புரிதலை அறிய முற்படவேண்டும். எபி.3:12

கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் மிகுந்த கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர்.  சங். 103:8  

பொறுமையோடும் சாந்தத்தோடும் தேவனிடம் மன்றாடும் போது சகலத்தையும் சீர்படுத்துவார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/  

-*--*--*--*--*--*--*--*--

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக