*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சகல நாட்களிலும் நம்மோடு இருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அனைத்து பக்கங்களிலும் நம்மை அணைத்து பாதுகாக்கிறவர்.
எப்பக்கமும் பாதுகாவலோடு இருக்கவேண்டும் என்பதில், நம் பிதாவானவர் நம் மீது கவனமாக இருக்கிறார்.
(1) முற்புறத்திலும் (2) பிற்புறத்திலும் நம்மை நெருக்கி, அவர் கரத்தை நம் (3) மேல் வைக்கிறார் (சங் 139:5)
(4) விமானத்திலும், (5) ராக்கெட்டிலும் பறந்தாலும், நம் கூடவே வருகிறவர். (6) கப்பல் ஏறி சமுத்திரத்தில் போனாலும் அங்கேயும் நம்மோடு இருப்பவர் (சங்139:8-9)
அடையாளம் கண்டுக்கொள்ள சொந்தக்காரர் எவரும் இல்லை,
தவறு செய்தால், ஊர் முழுக்க பரப்பி அவமானப்படுத்த யாரும் இல்லை,
ஏன் என்று கேள்வி கேட்க எவருக்கும் அதிகாரம் இல்லை,
சகல அதிகாரமும் தன் கையில் இருந்தது,
எவரும் காணமுடியாமல், கதவும் அடைபட்டிருந்தது..
ஒருநாள் அல்ல, ஒருமுறையல்ல, பலமுறை பலநாட்களாய் வலியுறுத்தி பிரியமாய் கட்டியணைக்க அழகான பதுமையின் ஆதரவும் இருந்தது !! எல்லா சூழ்நிலையும் சாதகமாக இருந்தபோதும், யோசேப்பு சொன்னார் *“தேவன் என்னைக் காண்கிறார்”* .. ஆதி. 39:4-12
இரகசியமான அனைத்தையும் தேவன் அறிகிறவர் !! மத்.10:26
எங்கிருந்தாலும் தேவனுக்கு பயந்து,
அவர் கட்டளைபடி நடப்போம்.
உத்தமத்தில் நடக்கும் எவரையும் தேவன் ஆசீர்வதிப்பார். 2சாமு.22:31
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக