புதன், 9 டிசம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 9 Dec 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.

சபையில் ஒருவர், நமக்கு விரோதமாய் தவறு செய்தால் சட்டென்று நாம் *கோபித்துக்*கொள்கிறோம்.  அதோடு நின்றுவிடாமல் அவருடைய தொடர்பையும் படிப்படியாய் *குறைத்தும் விடுகிறோம்*.

அவன் *சங்காத்தமே வேண்டாம்.. நமக்கு ஒத்தேவராது என்று ஒதுங்கி* விடுகிறோம்.  ஏதோவொரு வகையில் இந்த நடவடிக்கை நமக்கு சமாதானத்தை தந்தாலும்... வேதமோ அதற்கு மாறாக தான் சொல்லுகிறது.

நம்முடைய தகப்பன் தான் அவர்களுக்கும் தகப்பன்.

நாம் எல்லாரும், ஒரு தகப்பனின் பிள்ளைகள்.

ஆகவே,
பிரச்சனை வந்தாலும்,
உருவானாலும் நேருக்கு நேராய்,
பட்டென்று முகத்தில் அடிப்பது போல கேட்டு விடாமல், *பொறுமையாய்* அவர்களிடத்தில் நாம் எடுத்து சொல்லி *சரி செய்ய வேண்டுமாம்* கலா 6:1

பூரணமாய் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்த கொரிந்து சபையானது (1கொரி 1:5-7)
பிரிவினை, உபதேச கோளாறு, விபசாரம், விக்கிரகங்களுக்கு மதிப்பளித்தல், காணிக்கையில் அறியாமை, தெய்வீகம் என்று நினைத்து தொழுகையில் உளறல், பாடுவதில் குழப்பம் என்ற *அனைத்து ஒழுங்கீனமும்* கொண்டிருந்ததை பவுல் பட்டியல் இட்டாரே !!

வளர்ந்து விட்டோம் என்ற எண்ணம் இருந்தால்,
உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தராது.

கொஞ்சம் கஷ்டம் தான்..
ஆனால் கீழ்படிய நாம் போதிக்க பட்டிருக்கிறோம்.

ஒரே ஒரு படியை பற்றி ஒவ்வொரு நாளும் முன்னேறினாலும், பெரிய வெற்றியை தேவன் தருவார்.

ஒருவரையொருவர் நேசிக்கப்பழகுவோம்.

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய :  https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக