தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
அன்பின் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
முக்கியமானவைகளையும், மிருதுவானதயும் பத்திரமாக கையாளவேண்டும். முரட்டான கையாடல் அவைகளை இழக்கச் செய்யும்.
அதுபோலவே,
இரத்தம்,
இருதயம்,
ஈரல்,
இரத்தத்தை கடத்திச்செல்லும் நரம்புகள்,
முதுகெலுப்பு,
மூளை, கண்கள் மற்றும் அனைத்து
முக்கிய உறுப்புகளும்,
சரீரத்திற்கு வெளியே சுலபமாக தென்படாமல்,
தேவன் அவைகளை சரீரத்தில் மறைத்து பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்.
அவைகளில் ஒன்றில் ஏதாகிலும் சிறிய கோளாறு ஏற்பட்டாலும், உடனடியாக கவனிக்கத் தவறினால்,
மற்ற உறுப்புகள் எவ்வளவு ஆரோக்கியமாய் இருந்தாலும்,
முழு சரீரத்தின் இயக்கத்தையும் அது பாதிக்கிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம்,
கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருப்பதால்;
நம்முடைய சகோதரனோ,
சகோதரியோ,
உறவினரோ,
எவரையும் உதாசீன படுத்தாதப்படிக்கு,
அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் போல் இருந்தாலும்,
கவனியாமல் விடும்பட்சத்தில்,
அனைவருக்கும் பாதிப்பைக் கொண்டுவரும். 1 Cor 12:21-26
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் (சங் 22:24) என்ற வார்த்தைக்கு இணங்க நாமும் ஒருவரையும் உதாசீனப்படுத்தாமல் அனைவரையும் கனப்படுத்த வேண்டும்.
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக