வெள்ளி, 25 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 25 Dec 2020

https://maryramirez.files.wordpress.com/2018/07/truth1.png

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


கீழ்படியும் எல்லா ஜனத்தையும் பாவத்திலிருந்து இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

உலகமே இந்த நாளை இயேசு பிறந்த தினம் என்று கொண்டாடுகிறது.

பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும்,
அவர் கொடுத்த போதனையையும் கடைபிடித்து, அவரை மாத்திரம் பற்றிக்கொள்ளும் போது நிச்சயம் பரலோகம் போக முடியும். யோ.14:6

அவர் கூறாததை செய்யும் போது, அவரை பின்பற்றவில்லை என்பதாகும். அவரால் மாத்திரமே, நம்மை பரலோகத்திற்கு கொண்டு போக முடியும் என்பதை நாம் அறிந்தும், அவருடைய பாதையை பின்பற்றாமல், வேறொரு சாலையில் பயணித்தால் முடிவு வேறு ஸ்தலமாகிவிடும். அப்.4:12

*சபைக்கு வரும் பழக்கமே இல்லாதவர்கள் கூட,
எப்படியாவது ஒரு கும்பிடு போட்டு விடவேண்டும் என்ற நினைப்பில் ”இன்றைய நாளில் ஜெபகூட்டதிற்கு வருபவர்களின் ஆத்துமாவின் ஆதாயத்திற்காக
*, இந்த நாளை நான் பயன்படுத்த தவற மாட்டேன்”. !!

கிறிஸ்துமஸ் என்ற பெயரில்,
கிறிஸ்துமஸ் தாத்தா,
கிறிஸ்துமஸ் மரம்,
கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம்,
ஆடு, மாடுகள், மூன்று சாஸ்திரிகள், பொம்மை, நட்சத்திரம் வைக்கபட்டு நாடகங்களும், கச்சேரிகளும் அரங்கேற்றி அன்றைய தினத்தில் மகிழ்ச்சியாக உலகமே குதூகலித்தாலும்,
தன் பாவத்தைக்கூட உணர வாய்ப்பு கொடுக்காமலும்,
*வேதத்தில் சொல்லப்படாதவைகளை பின்பற்றக்கூடாதென்று*  கூடிவந்தவர்களுக்கு எச்சரிப்பு மணியை கட்டி விடவேண்டிய பொறுப்பு பிரசங்க மேடைகளுக்கு உள்ளது என்பதை அறிந்து தைரியம் கொண்டு வைராக்கியத்துடன் போராட வேண்டும்.

*ஒரே ஒரு நிமிடம் செலவு செய்து* நமக்காக, தேவனுடைய அங்கலாய்ப்பை வெளிப்படுத்தும் எசேக்கியேல் 22:23-31 வரை உள்ள வசனங்களை வாசிக்கவும்.

வேதாகமத்தில் இல்லாததை கடை பிடித்தல் தண்டனையை வருவிக்கும்.

பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுவின் பிறந்த நாள் என்று சொல்லி, அன்று *பிராந்தி கடையும் பீர் வியாபாரமும் விபசார விடுதிகளும் களை கட்டுகிறது* !!

சுமார், 6 லட்சம் புருஷர்கள் மோசேயின் மூலம் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த மனிதர்களில், *தேவனுடைய பேச்சை முழுமையாய் கேட்ட 2 பேர் மாத்திரமே இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசித்தார்கள்*. 1கொரி. 10:2

பாவத்தை விட்டு, மீட்பரை பற்றிக்கொள்ள இந்த நாள் உதவட்டும்.

என் தேவனே, எங்களை பவுல்களாகவும் பேதுருக்களாகவும் மாற்றும்...
பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லியே, ஜனங்களை பாவத்திற்குள்ளாக்கும் பிரசங்க மேடையாளர்களின் கண்களைத்திறந்தருளும்.

தேவனிடத்தில் ஆபிரகாம் கெஞ்சின 10 நீதிமான்களில் ஒருவராகவாவது, நாங்கள் இருக்க முயற்சிசெய்வோம் !! ஆதி. 18:23-32

சத்தியத்தை சத்தியமாய் சொல்வோம். பாவத்திலிருப்பவர்களின் வாழ்வில் இரட்சிப்பு மலரட்டும்.

தேவனுக்கு கீழ்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப் 5:29

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக