*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : *Eddy Joel Silsbee*
கரிசனையோடு நம்மை நடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பல வருடமாக உபயோகப்படுத்தாமல்,
பொருட்படுத்தாமல்,
வெளியில் எறிந்து விடப்பட்ட வீணான பொருளை,
ஒருவருக்கும் பயன்படாமல்,
பிரயோஜனமின்றி கிடப்பதை சரி செய்து உபயோகிக்க ஆரம்பித்தால், உரியவர் வந்து “இது என்னுடையது” என்று உரிமை கொண்டாடுவது உரிமை !! .... ஆதி 26:18-20
சுய உரிமையை நிலைநாட்ட முயற்சிக்காமல்,
விட்டுக்கொடுத்தால் தான் ஆசீர்வாதம் இன்னும் நமக்கு வரும்..
பழையதைக் காட்டிலும் புதிய முயற்சியை இன்னும் அதிகமாய் தேவன் ஆசீர்வதிக்கிறவர்.. ரெகொபோத்தின் சம்பவம் அதுவே !! .. ஆதி 26:22
அன்று வரை நம்மை எதிர்த்தவர்களும்,
தொல்லை தந்தவர்களும்,
போராடினவர்களும்,
எதிரிகளும்,
நம்மை பார்த்து தேவனை துதித்து, நாம் வெற்றி கண்ட போது,
நம்முடன் சேர்ந்து உட்கார்ந்து பந்தியிருக்க ஆசை படுவார்கள். ஆதி 26:26-30
எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல், உற்சாகத்துடன் இன்னும் உழைப்போம்.
தேவன் நமக்கு அதிக பெலத்தை தந்திருக்கிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக