சனி, 12 டிசம்பர், 2020

#1046 - சீயோன் என்றால் என்ன? எருசலேம் என்றால் என்ன?

#1046- *சீயோன் என்றால் என்ன? எருசலேம் என்றால் என்ன*?

*பதில்* : இவை இரண்டுமே, இஸ்ரேல் நாட்டில் உள்ள இடத்தின் பெயர். மேலும், சாலமோன், தேவனுக்கென்று ஆலயத்தை எருசலேமில் கட்டியதால், சீயோன் என்பதும் எருசலேம் என்பதும் தேவனுடைய நகரமாக அழைக்கப்பட்டது.

நாம் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கிறோம்.

தேவன் கட்டிடங்களில் வாசமாயிருப்பதில்லை. அப். 17:24
தேவனை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். யோ.4:21

சபைகூடி வருவதற்கென்று பிரத்யேக அலங்காரமுள்ள கட்டிடம் அவசியமில்லை. அப்படி அலங்காரம் செய்யப்பட்ட இடமானது, அநேகரை விக்கிரகாரதனைக்குள்ளாக்கிவிடும். அதற்குள் மற்றவர்களை வழிநடத்தாமல் இருக்கவேண்டியது மிக அவசியம். அதற்கான தண்டனை அவரவர் கணக்கில் ஏறுகிறது. வெளி. 2:14, 1யோ.5:21

நம் வசதிக்காக, ஓரிடத்தில் கூடிவந்து, மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் இருக்க தனிக்கட்டிடம் அல்லது தனி இடம் ஒதுக்குவதில் தவறில்லை.

எருசலேம் தேவாலயத்தைக் காண்பித்து, ஆகா ! ஓகோ ! என்று இயேசுவின் சீஷர்கள் புகழ்ந்த போது, ஒரு கல் கூட மிஞ்சாமல் அந்த கட்டிடம் இடிக்கப்படும் என்றார். மத். 24:1-2, மாற்கு 13:1-2, லூக்கா 21:5-6

எந்த ஒரு கட்டிடமோ, நகரமோ, பட்டணமோ, கிறிஸ்தவத்தில் முக்கியம் இல்லை. நம்முடைய நோக்கம் அனைத்தும் தேவனை தொழுவதிலும் கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிவதிலுமே இருக்க வேண்டும்.

சீயோனைக் குறித்தும் எருசலேமைக்குறித்தும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பொருளைக் கீழே பதிவிடுகிறேன்.

*சீயோன்*
எருசலேமின் கோட்டை, சியோன் என்றும் அழைக்கப்படுகிறது.
தாவீதினால் யெபூசியர்களிடமிருந்து எடுக்கப்பட்டது
2 சாமு.5: 6-9; 1நாள.11: 5-7

அதன் பிறகு "தாவீதின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது
2 சாமு.5: 7; 2 சாமு.5: 9; 2 சாமு.6: 12; 2 சாமு.6: 16; 1 இரா.8: 1; 1நாள.11: 5; 1நாள.11: 7; 1நாள.15: 1; 1நாள.15: 29; 2நாள.5: 2

உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்ட இடம்.
2 சாமு.6: 12; 2 சாமு.6: 16; 1 இரா.8: 1; 1நாள.15: 1; 1நாள.15: 29; 2நாள.5: 2

உடன்படிக்கைப் பெட்டி மோரியா மலையில் உள்ள சாலொமோனின் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது.
1 இரா.8: 1; 2நாள.5: 2; 2நாள.3: 1

கூட்டாக, இஸ்ரவேலின் வழிபாட்டின் இடம், வடிவங்கள் மற்றும் கூட்டங்கள்
2 இரா.19: 21; 2 இரா.19: 31; சங்.9: 11; சங்.48: 2; சங்.48: 11-12; சங்.74: 2; சங்.132: 13; சங்.137: 1; ஏசா.35: 10; ஏசா.40: 9; ஏசா.49: 14; ஏசா.51: 16; ஏசா.52: 1-2; ஏசா.52: 7-8; ஏசா.60: 14; ஏசா.62: 1; ஏசா.62: 11; எரே.31: 6; 50: 5; புலம்.1: 4; யோவேல் 2:1, 15; மத். 21: 5; யோ.12: 15; ரோ. 9:33; 11:26; 1பேது.2: 6

எருசலேமுக்கு சீயோனின் பெயர் பயன்படுத்தப்பட்டது
சங்.87: 2; சங்.87: 5; சங்.149: 2; உன்ன. 3: 11; ஏசா.33: 14; ஏசா. 33: 20; எரே 9: 19; எரே 30: 17; சகரி. 9: 13

கடவுளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
சங்.87: 2-3; ஏசா.60: 14

மீட்டெடுப்பு, வாக்குறுதி
ஏசா.51: 3; 51: 11; 51: 16; 52: 1-2; 52: 7-8; 59: 20; 60: 14; ஒப. 1: 17; ஒப.1: 21; செப். 3: 14; செப். 3: 16; சகரி. 1: 14; 1: 17; 2: 7; 2: 10; 8: 2-3; 9: 9; 9: 13

மீட்கப்பட்டவரின் நகரத்திற்கு பயன்படுத்தப்படும் பெயர்
எபி. 12: 22; வெளி. 14: 1

*எருசலேம்*
எபூசி அல்லது எபூசு என்றும் அழைக்கப்பட்டது.
யோசு. 18: 28; நியா. 19: 10

சீயோன்  என்றும் அழைக்கப்பட்டது.
1இரா. 8: 1; சகரி. 9: 13

தாவீதின் நகரம்  என்றும் அழைக்கப்பட்டது.
2 சாமு 5: 7; ஏசா. 22: 9

சாலேம்  என்றும் அழைக்கப்பட்டது.
ஆதி. 14: 18; சங். 76: 2

அரியேல்  என்றும் அழைக்கப்பட்டது.
ஏசா. 29: 1

கடவுளின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
சங். 46: 4

பெரிய மன்னரின் நகரம்  என்றும் அழைக்கப்பட்டது.
சங். 48: 2

யூதா நகரம்  என்றும் அழைக்கப்பட்டது.
2நாள. 25: 28

அழகின் முழுமை, முழு பூமியின் மகிழ்ச்சி
புலம். 2: 15

கர்த்தருடைய சிம்மாசனம்
எரே. 3: 17

புனித மலை  என்றும் அழைக்கப்பட்டது.
தானி. 9: 16; 9: 20

புனித நகரம்
நெகே. 11: 1; 11: 18; மத். 4: 5

சத்திய நகரம்
சகரி. 8: 3

யெகோவா-ஷம்மா  என்றும் அழைக்கப்பட்டது.
எசே. 48: 35

பரலோகத்தை புதிய எருசலேம் என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது.
வெளி. 21: 2; 21: 10-27

எந்த ஒரு கட்டிடமோ, நகரமோ, பட்டணமோ, கிறிஸ்தவத்தில் முக்கியம் இல்லை. நம்முடைய நோக்கம் அனைத்தும் தேவனை தொழுவதிலும் கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிவதிலுமே இருக்க வேண்டும்.

புனித யாத்திரை என்றோ,
வாழ்க்கையில் ஒருமுறையாவது எருசலேம் நகரத்தில் காலடிவைத்துவிட்டால் பரலோகம் போய்விடலாம் என்றோ,
இஸ்ரேல் நாட்டில் ஒரு சதுரஅடியாவது எப்பாடுப்பட்டும் வாங்கி வைத்தால் பரலோகம் நிச்சயம் என்றோ, சொல்லப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக