வெள்ளி, 6 நவம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* by : Eddy Joel Silsbee, 6 Nov 2020

 

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


தன் வார்த்தையால் சகலத்தையும்  உருவாக்கினராகிய தேவன் தாமே நம்மை இன்னும் சீர்படுத்துவாராக.

தலையில் பூ வைத்துக்கொள்ளாமல் இருப்பது,

வீட்டில் மாமிச கறி சமைக்காமல் இருப்பது,

புது துணி உடுத்தாமல் இருப்பது,

வீட்டில் விசேஷம் எதுவும் வைக்காமல் இருப்பது,

ஜூஸ், தண்ணீர், காபி அல்லது பால் மாத்திரம் குடித்துக்கொண்டு ஆகாரத்தை சாப்பிடாமல் இருப்பது,

ஒரு வேளை மாத்திரம் ஆகாரத்தை சாப்பிடுவது,

கஞ்சி மாத்திரம் குடிப்பது போன்றவையெல்லாம் சுய *கட்டுப்பாடு*.

அதை, *உபவாசம்* என்று சொல்லக்கூடாது !!

*உபவாசம் என்பதின் அர்த்தம் பட்டினி*.
அதாவது, *வாயினுள் எதுவுமே போககூடாது* !!

மேலும், வேதத்தில் உபவாசம் வரும் இடம் எல்லாம், ஜெபமும் கூட இருப்பதை நாம் கவணிக்க வேண்டும்.

அவர் வார்த்தைக்கு கீழ்படியுங்கள் என்று கிறிஸ்து சொன்னாரேயன்றி, அவரைப்போல 40நாள் உபவாசம் இருங்கள் என்று நமக்கு கட்டளையிடவில்லை.

செய்யவேண்டியதை விட்டு சொல்லாததை செய்வது - மீறுதல் !!

ஏசா 58:7  பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக