திங்கள், 30 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 30 Nov 2020


 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


ஒரு குழந்தைக்கு *மண்னாங்கட்டி* என்று பெற்றோர் பெயர் வைத்தால்(?) அவரை கூப்பிடும் தமிழ் அர்த்தம் தெரியாதவர்களுக்கு எந்த உணர்வும் இருப்பதில்லை. தமிழ் அர்த்தம் புரியாதவர்களுக்கு, அவர் வெறும் Mr.மண்னாங்கட்டி தான்.

ஆனால் *அர்த்தம் புரிந்தவர் மத்தியில்* ஒவ்வொரு முறையும் அவரை “மண்னாங்கட்டி, மண்னாங்கட்டி” என்று கூப்பிடும் பொழுதெல்லாம் இவர் இதயம் எப்படியிருக்கும்?

அது போலவே, பிரசவத்தின்போது தனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்த பிள்ளை என்றதால், அந்த தாய் அவனுக்கு *யாபேஸ்* என்று பெயரிட்டாள். *யாபேஸ் என்றால் துக்கம்* !!

உறவினர்களும், நண்பர்களும் அவனை *யாபேஸ், யாபேஸ்* என்று கூப்பிடும் போதெல்லாம் யபேசுக்கு, வாழ்நாளெல்லாம் எவ்வளவு அவமானமாய், வருத்தமாய் இருந்திருக்கும் !!

இருந்தபோதிலும், தேவன் தன்னை வீணாக படைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்த *Mr.துக்கம்* (Mr.யாபேஸ்) இஸ்ரவேலின் தேவனை நோக்கி கீழ்க்கண்டவாறு விண்ணப்பம் பண்ணினார்:

(1) தேவரீர் என்னை ஆசீர்வதித்து,
(2) என் எல்லையைப் பெரிதாக்கி,
(3) உமது கரம் என்னோடிருந்து,
(4) தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக்
(5) காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;
அவன் வேண்டிக்கொண்டதைத் *தேவன் அருளினார்*.  1நாளா 4:10

*Mr.துக்கம்* என்று எந்த ஜனங்கள் அழைத்தார்களோ, அவர்கள் மத்தியில் தானே இப்போது மாற்றத்தை கவனித்தார்கள்… ஆம்,  அவருடைய சகோதரரைக் காட்டிலும் *கனத்தை* பெற்றாராம். 1நாளா 4:9

*நம்முடைய நிலைமை எப்படி இருந்தாலும், தேவனால் மட்டுமே மாற்ற முடியும்*.

பெயரோ, நிலைமையோ, படிப்போ, சூழ்நிலையோ, நம்மை தீர்மானிக்காது. மாறாக, நம்முடைய விசுவாசமும், ஜெபமும், அதற்குரிய தேவ தயவுமே நம்மை உயர்த்தும்.

அவரவர் *தவறுகளை உணர்ந்து மனந்திரும்பியபின்,* தைரியமாய் தேவனிடத்தில் முறையிடுவோம்.

கோணலானதை சரி செய்ய அவரால் மாத்திரமே ஆகும். (ஏசா 45:2)

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக