ஞாயிறு, 29 நவம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 29 Nov 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

சகல பொக்கிஷதிற்கும் ஊற்றுக்ககண்ணாகிய நம்முடைய தேவகுமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

புத்தியாய் ஒரு காரியத்தை ஒருவர் செய்துவிட்டாலோ, தவிர்த்துவிட்டாலோ, ஞானமாய் செய்து விட்டதாகவும் அவர் ஞானவான் என்றும் மெச்சிக்கொள்கிறோம்.

ஆனால் ஞானத்தை இரண்டு வகையாக வேதாகமம் பிரிக்கிறது.

பிரிவினை,
கசப்பு,
வைராக்கியம்,
விரோதம்,
பெருமை எல்லாம்
*உலக ஞானத்தில்* உருவாகிறதாம்! (யாக் 3:11-15)

*தேவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஞானமோ* நம்மை :
சுத்தமுள்ளதாயும்,
சமாதானத்தோடும்,
சாந்தமும்,
பிரிவினை இல்லாமலும்,
பட்சபாதம் இல்லாமலும்,
போலித்தன்மை இல்லாமல் மெய்யானதாயும் இருக்கிறது. யாக் 3:17

உலக ஞானம் நம்மை கலகபடுத்தி அழிவிற்கு கொண்டு செல்கிறது..(யாக்3:16)

தேவ ஞானம் நம்மை நித்தியத்தில் சேர்க்கிறது. *தேவ ஞானத்தையே பெற்றுக்கொள்ள நாடுவோம்* (யாக்1:5)

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக