புதன், 14 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 14 Oct 2020

 தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

இரகசியமாக கதவுகளை அடைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஜெபிக்கலாம்.
இரகசியமாக வேதமும் வாசிக்கலாம்.
இவைகளில் எந்த தடையும் இல்லை..
வேதாகமத்திலும் அதற்கு உதாரணங்களை நாம் பார்க்க முடிகிறது.

சமீப காலமாக நம் காதுகளில், தான் இரகசிய கிறிஸ்தவன்(ள்) என்று சொல்பவர்கள் பெருகிவருவதை கேட்கமுடிகிறது.

தன் பதவிக்காக, தன் குடும்பத்திற்காக, சமுதாய சூழ்நிலைக்காக, தன் கொள்கைக்காக, தன்னை கிறிஸ்தவன் என்று வெளியே சொல்ல அச்சப்படும் நபர்களை வேதம் எப்படி பார்க்கிறது?

மத்தேயு 10ம் அதிகாரம் 32-33வசனங்களில் ”மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” என்றார் இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவனது இரட்சிப்பின் துவக்கமே, கிறிஸ்துவை, தேவனுடைய குமாரன் என்று மற்றவர்கள் கேட்க அறிக்கை பண்ண வேண்டும் (அப்8:37)

கிறிஸ்துவை ஏற்றுகொண்டவன், மற்றவர்களுக்கும் அந்த இரட்சிப்பை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறான் (மத் 28:18-19)

இரகசிய கிறிஸ்தவன்(ள்) என்று சொல்பவர்கள் ”கிறிஸ்துவின் வல்லமை தன்னை வழிநடத்தும்” என்றும், அவர் மாத்திரமே இரட்சகர் என்றும் உணர்ந்து தடைகளை உடைத்து, வெளியரங்கமாய் உண்மையான கிறிஸ்தவனாக வரவேண்டும்.

போதுமான விசுவாசத்தை தேவன் தாமே அனைவருக்கும் அளிப்பாராக.

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக