செவ்வாய், 15 செப்டம்பர், 2020

#1013 - ஆலயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவது சரியா?

 #1013 - *ஆலயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவது சரியா*?

*பதில்*:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார் இயேசு கிறிஸ்து. யோ. 8:12.

தீபாவளி, Marry Christ Mas போன்று மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகளின் மூல ஆதாரக் கதைகளை அறிந்திருந்தாலும் கடந்த பல வருடங்களாக இந்துக்களையும் கிறிஸ்தவ மதத்தினரையும் இஸ்லாமியரையும் மற்றும் அனைத்து தரப்பினரையும் பாகுபாடின்றி பங்குபெறவைக்கும்படியான நோக்கத்தில் எப்படி தீபஒளியாகவும் X-Masஆகவும் மாற்றினார்களோ இந்த மெழுகுவர்த்திக்கும் பல கதைகள் அவரவர் விருப்பத்திற்கு அர்த்தம் சொல்வார்கள்.

எப்படியாயினும், பிரதானமாக மக்களிடையே பரவியிருக்கும் நோக்கங்களை கீழே பதிவிடுகிறேன் :

சிலர்:
தான் ஒளியாய் இருக்கிறேன் என்று இயேசு சொன்னதால் ஒரு மெழுகு திரியை ஏற்றி கையில் பிடித்துக் கொண்டால் இயேசு தன் கூட வருவதாக ஒரு கூட்டம் நம்புகிறது;

ஒளியை ஏற்றிவிட்டால் இயேசு அந்த இடத்தில் அனைவர் மத்தியிலும் வந்து விட்டதாக ஒரு கூட்டம் நம்புகிறது;

பழைய ஏற்பாட்டு நியாயபிரமாண சட்டப்படி ஆசரிப்புக் கூடாரத்தில் விளக்கு இருந்ததன் அடையாளமாக ஒரு கூட்டம் விளக்கு ஏற்றுகிறது;

மெழுகுத்திரியை ஏற்றி கையில் பிடித்துக்கொண்டு ஜெபித்தால் இயேசு அதை நேரடியாக கேட்பதாக ஒரு கூட்டம் நம்புகிறது;

மெழுகுத்திரியை ஏற்றினால் தன் இருதயத்தில் இருக்கும் இருள் மறைந்து போவதாக ஒரு கூட்டம் நம்புகிறது;

இப்படி ஏராளம் ஏராளம்... கற்பனைக்கும் சொந்த புரிதலுக்கும் யார் அணைக்கட்ட முடியும்?

*வேதத்தின் படி இது சரியா தவறா*?
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரமே கீழ்படியவேண்டும். எபே. 4:15

மெழுகுத்திரியைக் ஏற்றிக்கொண்டு ஜெபிக்க வேண்டும் என்று வேதத்தில் எங்கும் சொல்லவில்லை.

என் நாமத்தின் மூலம் பிதாவை நோக்கி ஜெபியுங்கள் என்றார். மத். 6:8, யோ. 14:6

தேவன் நம்மில் வாசமாயிருக்கிறார். யாக். 4:5

கடவுளை ஒரு நெருப்பாகவோ, பறவையாகவோ, படமாகவோ, சிலையாகவோ, மிருகமாகவோ எதற்கும் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது அவர்களுக்கு பாவமாயிருக்கும். அது விக்கிரக ஆராதனை. யாத். 20:4-5, 23

கிறிஸ்துவத்தில் ஆலயம் என்பது ஒரு கட்டிடத்தையல்ல, ஆலயம் என்பது இரட்சிக்கப்பட்ட மக்களைக் குறிக்கிறது. 1கொரி. 3:17

ஆகவே மெழுகுத்திரியை ஏற்றவேண்டும் என்ற கோட்பாடு  கிறிஸ்தவத்தில் இல்லை. அது மனிதர்களின் பாரம்பரியம்.

மனிதர்களின் பாரம்பரியத்திற்கு தேவனுடைய அன்பு எதிர்த்து நிற்கிறது. மத். 15:3

ஆகவே, கற்பனைகளை விட்டு,
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, இயேசுவே இரட்சகர் என்று அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு  கிறிஸ்தவத்திற்கு திரும்பவேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக