#1012 - *யோபு எத்தனை காலங்கள் உபத்திரவப்பட்டார்?*
*பதில்* – வேதத்தில் குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனால் சில வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.
*வசனங்களை கவனிக்கவும்*:
யோபுவின் மூன்று நண்பர்கள் வந்தபோது, அவருடன் பேச முயற்சிக்கும் முன்பு ஏழு பகலும் ஏழு இரவும் அவருடன் அமர்ந்தார்கள் என்று யோபு 2:13 கூறுகிறது
யோபு 7:3 - "மாயையான *மாதங்கள்* என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான இராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது."
யோபு 29:2 - "சென்றுபோன *மாதங்களிலும்*, தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்."
யோபு 30:16 - ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் *நாட்கள்* என்னைப்பிடித்துக்கொண்டது.
யோபு 30:27 - என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; *உபத்திரவநாட்கள்* என்மேல் வந்தது.
யோபு உபத்திரவத்தை அனுபவித்த நாட்களைப் பற்றி மேலே உள்ள வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
அவர் தனது துன்பத்தை *ஆண்டுகளின் எண்ணிக்கையில்* இருப்பதாக குறிப்பு இல்லை என்பதால் இது ஒரு வருடத்திற்கும் குறைவானது என்று நாம் *நிதானித்தாலும்;*
யோபுவின் துன்பத்தின் நாட்கள் துவங்கி *எத்தனை காலத்திற்குப்பின் யோபுவின் நண்பர்கள் வந்தார்கள்* என்ற குறிப்பு இல்லை என்பதால் அவை *எவ்வளவு காலம் நீடித்தன என்ற முடிவுக்கு இதைப் பயன்படுத்த முடியாது*.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக