புதன், 2 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 02 Sep 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

நம்மை மகிமையில் வழிநடத்தும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எந்த சூழ்நிலையையும் ஆண்டவர் நமக்கு சாதகமாகவும் நன்மையாகவும் வைப்பார் அல்லது மாற்றுவார் என்பதை சந்தேகப்பட்டதால், ஆசா அதிக துன்பத்தை அடைந்தார். 2 நாளா 16:9

 

நமக்கு பிரச்சனை வரும்போது தேவனை நம்பியே நிற்க வேண்டும். 2இரா 20:3.

 

சுயமாக யோசிக்காமல், சுயபெலத்தை சாராமல், தேவனுடைய திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்தால் அவர் அதற்கு தக்க பலனைத் தருவார். அதற்காகவே அவர் காத்துக் கொண்டிருக்கிறார். எரே 32:19, ரோ 2:6

 

தேவன் நம்முடைய செய்கைகளின் பலன்களுக்கேற்றவற்றை கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறார். எரே 17:10

 

சுய திட்டத்தை செயல்படுத்த முனையாமல் – அவருடைய சத்தியத்தின்படி எது சரியானதோ அதையே செயல்படுத்துவோம்.

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக