*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாரதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன்னிடம் உள்ள போலியானதை பயத்தோடு செய்த காலம் போய் பகிரங்கமாய் அங்கீகரிக்கப்பட்டு துணிகரமாய் ஈடுபடுகிறார்கள்.
தேவனுக்கு ஆராதனை என்று தொலைகாட்சியில் பாடலை பார்த்து லயிப்பவர்கள்; பாவனையும் பாடலும் *வெவ்வேறு நேரத்தில்* எடுக்கப்பட்டது என்பதை உணர்வது இல்லை. ஆராதனை என்ற பெயரில் திரையில் பாடுபவர்கள் சிலருக்கு டப்பிங் கொடுக்கப்படுவது *உசிதமான கலப்படம்* !!
சினிமா பாட்டு தானே கேட்க கூடாது என்று சினிமாவையும் மிஞ்சும் அளவிற்கு இயேசுவின் பெயரை வைத்து குத்தாட்டமும் டான்ஸும் போடுகிறார்கள்.
அந்த தாக்கம் இப்போது பல கூட்டங்களில் பலரும் *வாயால் பாடுவதே இல்லை*.. கையாலும் காலாலும் தான் அதை செய்கிறார்கள். ஆராதனை கூடங்கள் என்ற பெயரில் கச்சேரிகளாகி போனது என்பது வேதனை !!
அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு – பல இடங்களில் டான்ஸ் மாஸ்டர் வைத்து ஊழியரும் சபையாரும் பாட்டுகளை ஒலித்து ஆராதனையில் ஆடுகிறார்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் எதிர்பாளர்களும் இரட்சிக்கப்படாதவர் ஆனாலும், அவர்கள் பாடின கிறிஸ்தவ பாட்டுகள் நேர்த்தியாய் இருக்கிறது என்று அவர்களை அழைத்து பாடல்களும் கிறிஸ்தவ கச்சேரிகளும் அரங்கேறுகிறது...
தேவனையா மனிதனையா – யாரை மகிமைபடுத்துகிறார்கள்?
கிறிஸ்தவம் என்கிற பெயரில் வேதத்திற்கு முரண்பாடாக செயல்படுவதை விட்டு சத்தியத்திற்கு திரும்பவேண்டும்.
கர்த்தருடைய கரங்களில் விழுவது பயங்கரமாயிருக்குமே !! (எபி 10:31)
தன்னுடைய வசனத்தின்படி நம்முடைய செயல்கள் இருக்கின்றனவா என்றே ஒப்பிட்டு பார்த்து தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறவர். யோ 12:48
ஆகவே பாடலானாலும் (கொலோ 3:16) செய்தியானாலும் (2கொரி 4:2, 2தீமோ 2:15) ஜெபமானாலும் (எபே 3:15) காணிக்கையானாலும் (1கொரி 16:1-2) கர்த்தருடைய பந்தியானாலும் (அப் 20:7, ரோ 6:1-5) – தேவகட்டளைப்படியே செயல்படுத்துவோம்.
சகலமும் ஒழுக்கமாய் நடக்கவேண்டும் என்பது வேதக்கட்டளை. 1கொரி 14:40
தேவன் தாமே நமக்கு சகலத்தையும் நம்மையாய் மாற்றித்தருவாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக