*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
நேர்த்தியான பாதையில் நம்மை வழிநடத்தும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வேலைக்கும் ஊழியத்திற்கும் என்ன வித்தியாசம்?
கிறிஸ்தவர்களுக்கு :- ஊழியம் என்றால் தேவனுடைய வேலை செய்வது.
ஆனால் - ஊழியம் என்றால் தூய தமிழில் “வேலை” என்பது !!
ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவே,
ஊழியம் *கொள்ள* வராமல், ஊழியம் *செய்ய* வந்தேன் என்றார் (மத் 20:28) சதா ஊர்ஊராக அலைந்து மக்களை போய் சந்தித்தார்.
ஆனால் – ஊழியன் என்ற வார்த்தையின் அர்த்தம் மறந்து போனதால் - கர்த்தருடைய வேலைக்காரன் கர்த்தருடைய சபையில் முதலாளிகளாக உட்கார்ந்து கொள்கின்றனர் !!
அப்படிப்பட்ட ஊழிய முதலாளிகளுக்கு வேலை (ஊழியம்) செய்யும் தொழிலாளிகளும் (அவர்களுக்கு விசுவாசிகள்) ரசிகர்களாக்கி விடுகின்றனர்.
இறங்கி வேலை செய்யவேண்டும் என்று வேதம் கட்டளை இடுகிறது. லூக்கா 10:10, மாற்கு 16:15, மத் 22:9
உடலில் பெலன் இருந்தும் வேலைசெய்ய மனதில்லையென்றால் சாப்பிடவும் கூடாது என்கிறார் பவுல்.... 2 தெச 3:7-10
ஊழியரையும் அவர் குடும்பத்தையும் தாங்கும் அளவிற்கு சபை வளர்ந்தோ அல்லது ஊழியரின் முழுமையான நேரம் சபையாருக்காக செலவிட அவசியப்படும் பட்சத்திலோ அல்லது ஊழியர் வேலை செய்ய சரீரம் இடம் கொடுக்காத சூழ்நிலையோ – சபைய அவரை போஷிக்க வேண்டும். 1 கொரி 9
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக