திங்கள், 17 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 17 Aug 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

உன்னதமான தேவனின் நாமத்திற்கு துதிகள் உண்டாவதாக.

 

ஒரு காரியத்தை சொல்லியும் செய்யாத பட்சத்தில்,

“வெட்கம் ரோஷம் மானம் சூடு சொரனை இருந்தா இப்படி செய்வியா” என்று உலக மக்கள் கேட்பார்கள்..

 

நாம் என்ன சொல்கிறோமோ அதையே செய்யவேண்டும் என்பது உலக நீதி மாத்திரமல்ல, அது தேவ நீதியாயிருக்கிறது.

 

சொன்னபடியே செய்கிறவன் – பூரண புருஷன் என்று யாக் 3:2ல் பார்க்கிறோம்.

 

பூரண படவேண்டுமென்றால் பொறுமையாய் இருக்கவேண்டும் (யாக் 1:4)

 

சொல் தவறாதவன் “உத்தமன் & நீதிமான்” என்றார் தாவீது. சங் 15:2-4

 

விளையாட்டிற்கு பேசினாலும் வீராப்புக்காக பேசினாலும் – அவை எல்லாவற்றிற்கும் தேவனுக்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டுமாம் (மத் 12:36)

 

சரியோ தவறோ – வாயினின்று வெளியேறிய வார்த்தையானது – பேசினவனை ஆண்டுகொள்கிறது. யாக் 3:6, நீதி 13:3, 1பேது 3:10

 

வாயாடி – பாவத்தில் விழுவது நிச்சயம். நீதி 10:19

 

தேவபக்தியுள்ளவன் – ஒழுக்கமாகவே பேசுகிறான். யாக் 1:26

 

சொன்ன வார்த்தையை செயல்படுத்தி முடிக்கவேண்டும்.

தேவனுடைய கட்டளைக்கு அப்படியே கீழ்படியவேண்டும்.

சமாதானம் நம் வசப்படும் !! 2கொரி 13:11

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக