*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
முழுமையாய் நம்மை இரட்சிக்கும் தேவனே நம்மை இன்னும் அதிகமாய் பெலப்படுத்தி வழிநடத்துவாராக.
தேவனுக்கு முன் – எவரும் விதிவிலக்கு அல்ல.
எகிப்திற்கு போய் யூதர்களை அழைத்து வரும்படி நேரடியாய் தேவனிடத்தில் இருந்தே கட்டளை பெற்று இருந்தார் மோசே. யாத் 3:10
தான் அனுப்பின வேலையை தான் செய்ய போகிறார் என்று தேவன் மோசேக்கு சலுகை காட்டிவிடவில்லை.
சின்ன பிள்ளை என்றோ,
வலி தாங்கமாட்டான் என்றோ,
அது உங்க பாடு என்றோ,
எங்க ஊர்ல இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றோ,
இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் 8ம் நாளில் தங்கள் குமாரனுக்கு செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை செய்யவிடாமல் மோசேயின் மனைவியாகிய சிப்போராள் தடுத்திருக்கிறாள்.
தன் தவறை உணர்ந்து,
கணவனை பறிகொடுத்து விடாமல்,
அவனை தக்கவைத்துக் கொள்ள - பிள்ளையின் வேதனையை பொருட்படுத்தாமல் *தாயாகிய சிப்போராளே* தன் மகன் நுனித்தோலை வெட்டிபோட்டார். யாத் 4:24-25. (இந்த சம்பவம் குறித்த அதிக விபரங்களை அறிய நம் கேள்வி மற்றும் வேதாகம பதில் #154ஐ கவனிக்கவும்)
ஆகவே - தேவனுடைய கட்டளை படி நாம் செய்ய வேண்டியதை தவறாமல் செய்ய வேண்டும்.
சிறியதோ, பெரியதோ..தேவன் அதை நம்மிடம் நிச்சயம் கேட்பார்!
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 16 Aug 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக