#1000 – *இயேசு கிறிஸ்து மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா அல்லது ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா*?
*பதில்* :
அடிப்படையான சுவிசேஷமே – கிறிஸ்துவின் :
(1)மரணம் (2)அடக்கம் (3)உயிர்த்தெழுதல். 1கொரி. 15:1-4
ஆகவே தான் இரட்சிப்பின் படிகளில் கீழ்கண்டவாறு நாம் அனைத்து சம்பவங்களிலும் வேதத்தில் கவனிக்கிறோம்:
சுவிசேஷத்தைக்
கேட்டு (ரோ. 10:17)
விசுவாசித்து (யோ. 8:24)
(1)பாவத்திற்கு *மரித்து* - மனந்திரும்பி (அப். 17:30)
பாவத்தை அல்ல - விசுவாசத்தை அறிக்கையிட்டு (ரோ. 10:9-10)
(2) தண்ணீரில் *அடக்கம்* (ஞானஸ்நானத்தில்)செய்யப்பட்டு (ரோ. 6:4)
(3) தண்ணீரிலிருந்து (புதிய சிருஷ்டியாக *உயிர்த்தெழுந்து*) வெளியே வருகிறோம். (ரோ. 6:5)
அப்படிப்பட்டவர்களை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தேவன் சேர்க்கிறார். அப். 2:47
இந்த வரிசையின்படி இல்லாமல் (மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல்) – அடக்கத்திற்கு (ஞானஸ்நானத்திற்கு) முன்னதாகவே இரட்சிக்கப்பட்டு விடுகிறவர்களின் கோட்பாடு வேதத்தில் இல்லாத ஒன்று !!
கிறிஸ்தவத்திற்கு வெளியே ஒரு பெருங்கூட்டம் கிறிஸ்து உயிர்த்தெழவேயில்லை என்றும் இன்னொரு கூட்டம் சிலுவையில் அவர் அறையப்படவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்க:
கிறிஸ்தவர்களுக்கோ – வாரினால் அடிக்கப்பட்டு பிட்கப்பட்டு சிலுவையில் தொங்கவிட்ட அதே மாம்சத்திலா அல்லது ஆவிக்குரிய மாம்சத்தில் கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரா என்று ஒரு கேள்வி பரவலாக உள்ளது.
"இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்." என்று மத். 27:50ல் காண்கிறோம்.
"ஆவியை விட்டார்" என்பது அவரது ஆவி அவரது உடலை விட்டு வெளியேறியது, அதாவது அவர் இறந்துவிட்டார். என்று பொருள்.
3ம் நாள் காலை கிறிஸ்துவானவர் தன்னுடைய மாம்சத்திலேயே உயிர்த்தெழாவிட்டால் – சரீர மரணம் அவரை ஆட்கொண்டு விழுங்கி ஜெயித்து விட்டது என்று அர்த்தமாகிவிடாதோ?
இந்த அடிப்படை விஷயத்தை எப்படி ஒருவர் சந்தேகிக்க முடிகிறது?
பல சான்றுகளால் அவர் தன்னை உயிரோடு காண்பித்தார்.
“*இயேசுவானவர் மாம்சத்தில் உயிர்த்தெழுவேண்டியது கிறிஸ்தவத்தின் அடித்தளம்*”
அது உண்மை இல்லை என்றால்,
கிறிஸ்தவமே போலியாகிவிடும்.
கவனமாக படிக்கவும்:
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
*கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் வீண், உங்கள் விசுவாசமும் வீண்*.
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1கொரி. 15:12-19
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற நம்பிக்கையான கூற்றுகளால் புதிய ஏற்பாடு நிரம்பியுள்ளது.
எபி. 2:14-15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபி 2:14-15
மேலும் எபே. 1:19-20, பிலி. 3:10, கொலோ. 1:18, எபி. 2:14-15
அவர் ஆவிக்குரிய சரீரத்தில் எழுந்திருந்தால் மாமிசம் எங்கு போனது? அந்த மாமிசத்தை வைத்து ரோம அதிகாரிகள் ஏன் கல்லறையை ஆதாரமாக்கவில்லை? அப். 5:28
மாம்சத்தை அல்ல – சீலைகள் சுற்றிகிடப்பதை தான் கண்டான் பேதுரு. குறிப்பாக அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை தனியாக வைக்கப்பட்டதையும் கண்டார். யோ. 20:5-7.
மிகவும் துல்லியமாக பேதுரு – அப். 2:31ல் கிறிஸ்துவினுடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை குறிப்பிடுகிறார்.
அப். 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அப். 2:26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
அப். 13:33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்
அப். 13:34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.
அப். 13:37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
*மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்*:
கிறிஸ்துவுக்கு முன்னர் உயிர்த்தெழுந்தவர்கள் அனைவரும் மறுபடியும் மரித்தனர்.
அவரது உயிர்த்தெழுதலானது - ஜீவனையும் மாம்சத்தையும் - அழியாததாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். 3 நாள் ஆனாலும் உயிரோடெழுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்கனவே காண்பித்திருந்தார்.
இனிமேல் மரிக்காதபடி முதற்பேறுமாய் - மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்ப வேண்டிய முதல்வராக அவர் இருக்கிறார். மனித உடலின் உயிர்த்தெழுதலுக்கான ஆதாரத்தை தனது சொந்த மாம்சத்தில் நிறைவேற்றி, மரண சாம்ராஜ்யத்தின் கீழ் திரும்பி போக வேண்டியதில்லை என்பதை நிரூபணம் செய்கிறார்.
எலிசா - சுனேமியாளின் மகன், கிறிஸ்துவே உயிர்தெழுப்பிய விதவையின் மகன், லாசரு, இன்னும் பலரையும் உயிர்பெற செய்தார். ஆனால் அவர்கள் அனைவரும் மீண்டும் இறந்தனர்.
ஆனால் நம்முடைய கர்த்தருடைய உயிர்த்தெழுதலோ - அந்த சரீரம் திரும்ப மண்ணுக்கு போக வில்லை !!
அது தான் அவருடைய ஜெயம்... மரணம் அவரை அடைத்துப்போடமுடியவில்லை.
மாம்ச சரீரத்தில் அவரால் எழுந்திருக்க முடியவில்லை என்றால் - மரணம் அவரை விழுங்கினதாகிவிடுமே !!
1கொரி. 15த்தின் படி - இந்த விதமான உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லப்படவில்லை - நாம் நிச்சயமாக மறுரூபப்படுவோம். நமக்கு புதிய சரீரம் கொடுக்கப்படும்.
ஆவிக்குரிய சரீரத்தில் எழுந்தார் என்றால் – பிரதான ஆசாரியரையும் மூப்பரையும் சேவகர்களையும் வரவழைத்து ஆலோசனைபண்ணி கிறிஸ்துவின் சீஷர்கள் களவாய் சரீரத்தை கொண்டு போய் விட்டார்கள் என்று ஏன் ஆலோசனை செய்யவேண்டும்? மத். 28:11-13
பணத்தை விரயம் செய்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்த இயேசுவை மறுக்க வைக்க அவர்கள் ஏன் முயற்சி செய்யவேண்டும்? மத். 28:15
*உயிர்த்தெழுந்தபின் கிறிஸ்துவை பார்த்தவர்கள் எவரும் அவர் மகிமையின் சரீரத்தில் இருந்ததாக சொல்லவில்லை*.
மத். 28:9-10, 16-20 மாற்கு 16: 9-14, லூக்கா 24:13-43; யோ. 20:11-23, யோ. 20: 26-29, 1கொரி. 15:5, லூக். 24:44-53, அப். 1:3-9.
இயேசு மாம்ச ரீதியாக உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று வேதம் தெளிவாக கற்பிக்கிறது.
வேறு எந்தவகையிலும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்காது.
உதாரணமாக, மக்கள் ஏற்கனவே பேய்களை நம்பினார்கள் (மத். 14:26).
இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் திரும்பி வருவது என்றால் மாம்ச சரீரம் செத்து விட்டது அதை தேவனுடைய வல்லமையால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதா?
ஒரு உடல் உயிர்த்தெழுதல் என்பது அவரது ஆவி அவரது உடலுக்குத் திரும்பியது.
இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் திரும்பி வந்திருந்தால், அவருடைய உடல் கல்லறையில் இருந்திருக்கவேண்டும்.
என்னைத் தொடாதே என்று கிறிஸ்து மரியாளிடத்தில் சொல்வது – வெறுமனே தொடுதல் என்ற அர்த்தம் அல்ல – மிகுந்த சந்தோஷத்தில் இயேசுவைப் கட்டிப்பிடித்துக் கொள்ளும் வார்த்தை அது.
ஆவிக்குரிய சரீரம் என்றால் – இது சாத்தியமாயிருக்குமா?
மரணம் அவரை ஆண்டுகொள்வதில்லை என்று வசனம் சொல்லியிருக்க – மாம்ச சரீரத்தில் அவர் உயிர்த்தெழாவிட்டால் மரணம் அவரை ஆட்கொண்டுவிட்டது என்று அர்த்தமாகிவிடாதோ? ரோ. 6:9
மாம்ச சரீரத்தில் உயிர்தெழுந்து பரலோகத்தில் எடுக்கப்படும் பொழுது – மாம்சமும் இரத்தமும் அழிவுள்ளதுமான சரீரமானது அழிவில்லா சரீரமாக மறுரூபமாகியிருப்பது அவசியமாகிறது. 1கொரி. 15:50.
இந்த வகையில் அழிவில்லா சரீரத்தை பெற்றுக்கொண்ட முதற்பலனடைந்தவரான கிறிஸ்து இயேசுவானவரே. 1கொரி. 15:20, 23, கொலோ. 1:18.
பரத்திற்கு ஏறும்போது மாம்ச சரீரம் கீழே ஏன் விழவில்லையென்று கேள்வி கேட்பவர்கள் – மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மறுரூபமலையில் அந்த சரீரம் என்னவாயிற்று என்று யோசிக்கவேண்டும். மத். 17:1-3
கிறிஸ்துவின் வருகையில் மரித்தோரும் உயிருள்ளோரும் மறுரூபமாவார்கள். அனைவருக்கும் அழியாத சரீரம் கொடுக்கப்படும். நித்தியமான நியாயதீர்ப்பிற்கென்று அந்த சரீரம் அவசியப்படுகிறது. 1கொரி. 15:51-52, மாற்கு 9:44
படிக்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக