*தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
வல்லமையுள்ள தேவகுமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவ மனிதர்களை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும்
என்று பிசாசு சுற்றி சுற்றி வருவான்.
மனிதர்களை விட அவன் - வயதிலும் அனுபவத்திலும்
மூத்தவன். அதிகம் அனுபவம் உள்ளவன். (வெளி 12:9)
தேவனோடு அனுதினமும் நட்பு பாராட்டி முகமுகமாய்
பேசிக்கொண்டு இருந்த ஆதாமையும் தான் நேசித்தவளைக் கொண்டே வீழ்த்தினவன். ஆதி 3:1, 3:5-6
கடவுளைப்போல வாழலாம் என்று
ஆசைகாட்டினவன். ஆதி 3:5
பட்டப்படிப்பு போல 3½ வருடம் நேரடியாக உலக
இரட்சகரிடமே பயின்ற பேதுருவையும் (12ல் முதல் ஆள்) யூதாஸையும் (12ல் கடைசி ஆள்) தன்
பக்கம் இழுத்தவனுக்கு நீங்களும் நானும் (தேவனுடைய ஆயுதமில்லையென்றால்) பிசாசுக்கு தூசியை
போல இருப்போம். கொச்சை தமிழில் சொல்லவேண்டுமானால் நாமெல்லாம் அவனுக்கு பச்சா!! மத்
10:1-4, எபே 6:10-11
அவனுடைய எல்லா தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்
முறியடிக்க வேண்டுமானால் – அவனையே உண்டாக்கிய நம்முடைய தேவனை நாம் சார்ந்து இருந்தால்,
அவன் “நமக்கு பச்சா” !!. சங் 25:15, எபே 6:15, யாக் 4:7.
தேவனைப் பற்றி இருந்தால் பிசாசின் தந்திரங்களை
நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். 2கொரி 2:11
அவன் எப்படிபட்டவனாய் இருந்தால் நமக்கு
என்ன? நம்மில் இருக்கும் தேவன் – சர்வத்திற்கும் வல்லவர். வெளி 1:8, ஆதி 17:1, ஆதி
49:25, 2கொரி 6:18
சகலத்தின் மீதும் சகல அதிகாரமும் உள்ளவர்.
அவரை முன்னிறுத்தினால் நமக்கு எப்போதும் ஜெயம் நிச்சயம். சங் 144:10
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked)
WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக