*தினசரி சிந்தனைக்கான வேத
துளி*
By : Eddy Joel Silsbee
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
கடந்த ஐந்து நாட்களாக வேதாகமத்தில் வரும்
எண்களை பார்த்து வருகிற முறைப்படி இன்று 6ம் எண்.
6ம் எண் - மனிதன் அல்லது அழிவு அல்லது
தேவனற்ற தேவகுறைவை குறிக்கிறது.
6ம் நாளில் – மனிதனும்,
காட்டுமிருகங்களும், நாட்டுமிருகங்களும், *ஊரும் பிராணிகளும்* படைக்கப்பட்டன.
ஆதி 1:25
6 நாள் மனிதன் வேலை செய்ய கட்டளையிடப்பட்டான்
– யாத் 31:15
கொலை செய்யாதிருப்பாயாக என்பது 10கட்டளைகளில்
6ம் கட்டளை !! யாத் 20:13
ஆச்சர்யமாய் – காயீனின் வம்சம் 6ம் தலைமுறைக்கு
மேல் வேதத்தில் சொல்லப்படவில்லை !! ஆதி 4:17-26
நோவாவின் காலத்தில் வந்த பேரழிவு – 600ம்
வருஷத்தில் ! ஆதி 7:6
யோபுவிற்கு வந்த 6 இக்கட்டுகளிலிருந்து
தேவன் நீங்கலாகினார். யோபு 5:19
ஜெப மாதிரியின் விண்ணப்பத்தில் – 6வது இடத்தில்
வருவது = சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்பது
!! மத் 6:13
இயேசு கிறிஸ்து பொல்லாதவர்களை குறித்து
பேசும் போது 6முறை ஐயோ என்று சொல்லியிருக்கிறார்
(லூக் 11:42-52)
6ம் மணி வேளையில் உலகம் இருண்டது..இயேசு
கிறிஸ்து சிலுவையில் தொங்கும் போது (மத் 27:45)
நேபுகாத்நேச்சார் சிலை 60 முழ உயரம். 6முழ
அகலம். தானி 3:1
வெளிபடுத்தின விசேஷத்தில் – அப்.யோவான்,
பிசாசிற்கு 6பெயர்களை குறிப்பிடுகிறார். பாம்பு, சர்ப்பம், பிசாசு, சாத்தான், ஏமாற்றுக்காரன்,
குற்றப்படுத்துகிறவன்.
தேவனற்ற – தேவகுறைவுள்ள (7-1) –
தேவனுக்கு முற்றிலும் எதிரான – தேவனை அறவே தள்ளின மனிதனை 666 என்று குறியீடுகளால்
அறியப்படுகிறான். வெளி 13:18
( வேதத்திலுள்ள எண்களை புரிந்து கொள்ள
மாத்திரமே இந்த பதிவுகள்.... எண் ஜோதிடத்திற்குள் நுழைந்து விடவேண்டாம்... அது
தேவனுடைய பார்வையில் அருவருக்கத்தக்கது !! கவனம் )
வேதத்தை பற்றிக்கொண்டு – மனிதனுக்கு
அல்ல, கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்பட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுவோம். அவரே நம்மை
உண்டாக்கினவர். நம்மை ஆசீர்வதிப்பவரும் அவர் மாத்திரமே.
சகல சந்தோஷத்தினாலும் நிறைவினாலும்
தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக