*தினசரி சிந்தனைக்கான வேத
துளி*
By : Eddy Joel Silsbee
நியாதிபதியாகிய கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.
இன்று எண் 9
9 - இறுதிநிலை அல்லது நியாயதீர்ப்பை குறிப்பதாக
வேதத்தில் காணமுடியும்.
இந்த 9ம் எண் ஆறாவது எண்ணுடன்
தொடர்புடையது.
அதன் காரணிகளின் கூட்டுத்தொகை (3x3 = 9, மற்றும் 3+3 = 6).
இது மனிதனின் முடிவிலும், மனிதனின் அனைத்து படைப்புகளின் கூட்டுத்தொகையிலும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே ஒன்பது என்பது இறுதி அல்லது
தீர்ப்பின் எண்ணிக்கை.
நோவாவின் காலத்தின் பாவம் நிறைந்த உலகை
முடிவிற்கு கொண்டு வந்த நோவாவின் பேழை – 900 முழம்
இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட பாவநிவிர்த்தி
நாள் (யோம் கிப்பூர்) தேவனுடைய வருடாந்திர விருந்து நாட்களில் ஒன்றாகும். ஏழாவது
எபிரேய மாதத்தின் 9 ஆம் நாள் சூரிய அஸ்தமனத்தில் தொடங்குகிறது. லேவி 23:32.
சிதேக்கியா ராஜாவின் ஆட்சியின்
ஒன்பதாம் ஆண்டில் தான், பாபிலோனின் ராஜா
நேபுகாத்நேச்சார் யூதாவின் தெற்கு ராஜ்யத்தை கைப்பற்றி அழிக்கும்படி எருசலேம்
நகரத்திற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக்
கொத்தளங்களைக் கட்டினார்கள். 2 இரா 25:1
ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா
ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச்
சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின்
பட்டணங்களிலும் குடியேற்றினான். 2 இரா 17:6.
723 கிபி யில் அசீரியர்களிடம்
விழுவதற்கு முன்பு இஸ்ரவேலின் கடைசி ராஜாவாக இருந்த ஓசெயா வெறும் 9 ஆண்டுகள் (732
முதல் 723 பி.சி.) ஆட்சி செய்தார். 2இரா 17:1-2
ஆகாய் தீர்க்கதரிசி நியாயதீர்ப்பு குறித்து
சொல்லும் போது 9 இடங்களையும் சேர்க்கிறார் (ஆகாய் 1:11)
உலகின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில்
உயிரைக் கொடுத்தது ஒன்பதாவது மணிநேரம். மத்
27:46.
ஆவியின் பலன்கள் 9 (கனிகள்). அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை,
தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். கலா
5:22-23.
(அடிக்கடி ஆவியில் நிரம்புகிறவர்கள் யோசிக்கவேண்டியவை....
முதல் கனியானதே அன்பு தான். குடும்பத்தில்
சண்டையே வராது. வீட்டில் சண்டை நிலைகொண்டிருந்தால் இருக்கும் ஆவி எது என்று சோதித்துப்பார்க்கவும்)
9ம் எண்ணுடன் எந்த ஒற்றை எண்களை பெருக்கினாலும்
வரும் விடையை அதன் ஒன்றோடு ஒன்று கூட்டினால் – முடிவு – *9தான்* வரும்!!
9ம் எண் = முடிவு அல்லது நியாயதீர்ப்பு
!!
எ.கா :
9x2=*18* = 1+8=*9*
9x5=*45* = 4+5=*9*
9x8=*72* = 7+2=*9*
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக