By : *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் தாமே
உங்களை ஆசீர்வதிப்பராக.
இன்று 3ம் எண்ஐ குறித்து
பார்க்கப்போகிறோம்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்
என்று தேவத்துவதை குறிப்பது (1 யோ5:8).
இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். (1 யோ5:7)
... எண் வடிவமானது துவக்கம்
மத்தியம் & முடிவு என்று 3
புள்ளிகள் உள்ளது.
3 வது நாளில் பூமி
தண்ணீரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜீவியம் துவங்கியது. ஆதி 1: 9-13.
நோவாவின் கால வெள்ளத்திற்குப் பிறகு
மனிதகுலம் நோவாவின் மூன்று மகன்களிடமிருந்து துவங்குகிறது: சேம், காம்
மற்றும் யாபேத் [ஆதி 10: 1-32].
ஆபிரகாம் 3
தூதர்களை பார்த்தார். அவர்களுக்கு 3 படி மாவில் ஆகாரம்
கொடுக்கப்பட்டது. (ஆதி 18:1,2,6)
மோரியா மலைக்கு மூன்று நாள்
பயணத்திற்குப் பிறகு ஆபிரகாம் தனது மகனை பலியிடும்பட செல்கிறார். ஆதி 22: 1-4.
குழந்தை மோசே தனது தாயால் மூன்று
மாதங்கள் மறைத்து வைக்கப்பட்டார் [யாத்திராகமம் 2: 1] மற்றும் வயது
வந்த மோசே பார்வோனிடம் வேண்டுகோள் விடுத்து, மோசே தனது
மக்களை மூன்று நாள் பயணத்தில் வனாந்தரத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கும்படி
கேட்டுக்கொண்டார் [யாத் 3:18 ].
ஆசரிப்பு கூடாரத்திலும்பின்னர்
எருசலேமில் உள்ள தேவாலயத்திலும் வாசஸ்தல பிரகாரம், பரிசுத்த ஸ்தலம்,
மகா பரிசுத்த ஸ்தலம் என்று 3 பிரிவுகள் இருந்தன. யாத் 27: 9; 26:
1-30, 35-37; 31-34; 38: 9-20; 21-31; 40: 1-33; 1 இரா 6:
1-37.
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 3
அற்புதமான ஆசீர்வாதங்களை கொடுக்கிறார். (எண் 6:23-26)
சீனாய் மலையில் கர்த்தர் தம்முடைய
நியாயப்பிரமாணத்தை ‘மூன்றாம் நாளில்’ கொடுக்க இறங்கினார் (யாத் 19:11).
அவர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ! (ஏசா6:3)
யோனா 3 நாள் மீன் வயிற்றில்
இருந்தார்.
இயேசு கிறிஸ்து – 3ம்
நாள் உயிர்தெழுந்தார்.
கெத்செமனே தோட்டத்திலும் மறுரூபமலையிலும்
கிறிஸ்துவுடன் மூன்று சீஷர்கள் இருந்தனர் (மாற்கு 9:2; மத் 26:37),
மற்றும் கல்வாரியில் மூன்று சிலுவைகள் இருந்தன.
3முறை பேதுரு மறுதலித்தார்
(யோ 26:69-75)
3முறை இயேசு கிறிஸ்துவினிடம்
பேதுரு அறிக்கையிட்டார் (யோ 21:15-17)
3பாஷைகளில் - எபிரேயு,
லத்தின் & கிரேக்க பாஷையில் இயேசு
யூதருடைய இராஜா என்று சிலுவையில் எழுதப்பட்டது. (யோ 19:20)
இயேசு கிறிஸ்துவோடு இரண்டு
கள்ளர்களும் சிலுவையில் அறையப்பட்டு – 3 சிலுவைகள் இருந்தது!
இயேசு மூன்றாம் நாளில்
மரித்தோரிலிருந்து எழுந்தார். [மத் 16:21, 17:23, 20:19; மாற் 9:31,
10:34; லூக் 9: 22, 18:33, 24: 7, 46; அப் 10:40].
சவுல் (பவுல்) மூன்று நாட்கள்
கண்பார்வையற்றிருந்தார். [அப் 9: 9].
பரலோக எருசலேமானது நான்கு
பக்கங்களிலும் ஒவ்வொன்றுக்கு மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது [வெளி 21:12].
இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலே
(நாமத்தினாலே) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்கிறோம். மத் 28:19
(வேதத்தை அறியாதவர்கள் -
தற்காலங்களில் புதிய அறிமுகமாக 3 முறை தண்ணீரில் மூழ்கி
ஞானஸ்நானம் கொடுக்க துவங்கியிருக்கிறார்கள் - கவனம் !! )
நம் வாழ்க்கையின் ஆரம்பம், மத்தியம்
முடிவு என்று அனைத்திலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ்வோம்!
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக