By
: *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
சகலத்தையும் அதிசயமாயும் அற்புதமாயும் நடத்தும்
தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக !
வேதாகமத்தில் உள்ள *எண்களை* குறித்து இனி
வரும் பத்து நாட்களுக்கு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும்படியாக சிந்திக்க போகிறோம்.
1, 3, 7, 12,
40, 120 எண்கள் அடிக்கடி வேதாகமத்தில் வருகிறதை கவனித்து இருப்போம்.
அவை அனைத்துமே அர்த்தமும் நோக்கமும் உள்ளது.
மாற்கு 8:18-21
…. நான் 5 அப்பங்களை 5000 பேருக்குப் பங்கிட்டபோது,
மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்,
12 என்றார்கள். நான் 7 அப்பங்களை 4000 பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை
கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். 7 என்றார்கள். *அப்படியானால்,
நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்* !.
*** *இரத்தின சுருக்கமாக* மாத்திரம் எழுதுகிறேன்.
*எண் ஜோதிடம் அல்ல* – எண்ணிக்கையின் நோக்கத்தை
ஆழமாய் உணர்ந்து உணர்ந்து கொள்ள இது உதவும்.
தேவன் எவ்வளவு நேர்த்தியாக சகலத்தையும்
வைத்து இருக்கிறார் !! அவருடைய ஞானத்தை யாரால் சொல்லி
முடியும்?
1 (ஒன்று) - எபிரேயத்தில் இஹாத்.
“*ஒன்று” - தேவனுடைய நாமம்* (சக 14:9)
ஒரே தேவனின் தொழுகையான தேவத்துவத்தின் மிகச்சிறந்த
எண்ணிக்கையாகும்.
எண் 1 தானாகவே வகுக்கப்படுகிறது. இது வேறு எந்த
எண்களிலிருந்தும் சுயாதீனமாக உள்ளது, ஆனால் அவை அனைத்தையும் உருவாக்குகிறது.
இது வேதாகமத்தில் ஒற்றுமை மற்றும் முதன்மையையும்,
தேவத்துவத்தையும் குறிக்கிறது. உபாகமம் 6:4, 1யோ 5:7
தேவன் ஒருவர் – மத்தியஸ்தரும் ஒருவர் – 1தீமோ
2:5, யோ 10:16
இயேசுவும் பிதாவும் “*ஒன்று*” (யோ 10:30)
ஒன்று - ஒற்றுமையை குறிக்கிறது (யோ 17:21-23)
கணவன்-மனைவி மற்றும் சபையையும் கூட குறிக்கிறது
(தனித்தனியே!) மத் 19:5, எபே 4:4-6
வேதத்தை புரிதலோடு நாம் படித்து அசை
போடும் போது, நன்மையும் ஆசீர்வாதமும் நம்மை சூழ்ந்து கொள்ளும்.
*Eddy
Joel Silsbee*
Preacher
– The Churches of Christ
Teacher
– World Bible School
WhatsApp
# +91 8144 77 6229
Bible
Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக