திங்கள், 12 ஆகஸ்ட், 2019

#333 - பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் - விளக்கவும்

#333 - *பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்* - விளக்கவும்.  #322ல் இசை, கைதட்டல் இருக்கக்கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் சங்கீதத்தில் இந்த வசனத்தின்படி என்ன அர்த்தம் ஐயா?

சங்கீதம், Chapter 150
4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள், யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

*பதில்* :
இந்த அற்புதமான சங்கீதத்தின்
முதல் 2வசனங்கள் ஏன் தேவனை துதிக்க வேண்டும் என்றும்;

3-5 வசனங்கள் எப்படி துதிக்க வேண்டும் என்றும்;

6ம் வசனம் யார் துதிக்க வேண்டும் என்று விவரிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட 4-5ம் வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் தகவல்:

தேவனை எவ்வாறு புகழ்ந்து பேசுவது? வெறுமனே சுவாசிப்பது உண்மையான புகழ் அல்ல. இஸ்ரவேல் தேசத்துடனான தேவனின் பழைய உடன்படிக்கையின் கீழ் நியாயமான வழிபாடு எப்படி இருந்தது என்பதை இந்த சங்கீதம் விளக்குகிறது (சங்கீதம் 150: 3-5).

இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வளவு உற்சாகமாகவும், எவ்வளவு ஆற்றலுடனும், உணர்ச்சியுடனும் தங்கள் கருவிகளை வாசித்து, தங்கள் கடவுளுக்காக நடனமாடியிருப்பர் என்பதைக் கவனியுங்கள்!

அதே மாதிரியான அணுகுமுறையையும் ஆர்வத்தையும் இன்று நம் வழிபாட்டிற்கு கொண்டு வருகிறோமா?

இன்று, இயேசுவின் இரத்தத்தால் ஆரம்பிக்கப்பட்ட உடன்படிக்கை, நம்முடைய நியாயமான வழிபாடு *முழு ஆயுள் தியாகம்* என்பதைக் காட்டுகிறது (ரோமர் 12: 1-2).

கிறிஸ்துவில் இருக்கும் என் சகோதர சகோதரிகளிடையே - நான் அவரை குறித்து பாடும்போது என் இதயத்தின் கருவி உண்மையான மெல்லிசையை உருவாக்குகிறதா (எபேசியர் 5:19)?

சங்கீதம் 150 ஐ நாம் கேட்க வேண்டிய கேள்வி "இன்று கிறிஸ்தவர்கள் கருவிகளைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமா" ?

அந்த கேள்வி நிச்சயமாக கவனமாக படிப்பதற்கும் பரிசீலிப்பதற்கும் தகுதியானது.

ஆம் அவர்கள் உபயோகித்தார்கள், சங்கீதம் 150: 3-5 வசனங்கள் அதை ஊர்ஜீதப்படுத்துகிறது.

நியாயபிரமாணத்தின்படி - அந்தச் சட்டத்தில் பலிகள், உணவு கட்டுப்பாடுகள், ஒரு தனி ஆசாரியத்துவம், ஒரு பிரதான ஆசாரியன், எருசலேமில் நேரடியாக போய் ஏறெடுக்கும் ஆராதனை, சனிக்கிழமையை கடைபிடித்தல் (ஓய்வுநாள் வழிபாடு), பயண தூரம் மற்றும் வேலை செய்யும் கட்டுப்பாடுகள், கட்டாய தசமபாகம், பஸ்காவை ஆண்டுதோறும் கடைபிடிப்பது (கதவுகளில் ஆட்டுக்குட்டி இரத்தம் பூசுவது), பல விருந்து நாட்களை கட்டாயமாக கடைபிடிப்பது, அனைத்து ஆண் சிறுவர்களையும் கட்டாயமாக விருத்தசேதனம் செய்தல், நியாயபிரமான குற்றங்களுக்கான மரண தண்டனை, புறஜாதியினரோடு திருமணம் செய்யும் தடை இப்படி 613 கட்டளைகளையும் சேர்ந்வை பழைய ஆராதனை முறை..,!!!

நாமோ கிறிஸ்தவர்கள்.
கிறிஸ்துவின் புதிய கட்டளையின்படி பிதாவை ஆராதிக்கிறோம்.

அப்போஸ்தலர்கள் / ஆதி கிறிஸ்தவர்கள் / புதிய ஏற்பாட்டின் ஆராதனை முறையை கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்றுகிறோம்.

கழுத்துக்கு கீழேயிருக்கும் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய நாம் கழுத்துக்கு மேலேயிருக்கும் கிறிஸ்துவை தலையாக கொண்டதால் – அவர் மூளை எதை நமக்கு சொல்லியிருக்கிறதோ அதை பின்பற்றுகிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக