திங்கள், 13 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 13 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

நன்மையான எந்த காரியத்தையும் அருளும் நம் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மற்றவர்களுக்கு நாம் பிரயோஜனப்பட வேண்டும் என்பது தேவனின் சித்தம். நமக்கு நாமே வாழ்ந்து கொள்வது கிறிஸ்தவம் அல்ல.

அழிவு வரப்போகிறது என்று யோனாவை நினிவே பட்டணத்து ஜனங்களுக்கு அறிவிக்கும்படி போக சொன்னார் தேவன். 

அவரோ ஊரை ஏமாற்றிவிடலாம் என்று தன் இடத்தை விட்டு ஊழியத்திற்கென்று புறப்பட்டு தனக்கு இஷ்டமான இடமாகிய  தர்ஷீஷிர்க்கு மாறி போனார்.  (யோனா 1:3)

ஜனம் பாவத்தில் கிடக்கிறது என்று நம்மை இரட்சித்ததும் அல்லாமல் – சகல இடங்களிலும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பது ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த கடமை. (மத் 28:19)

வேலை / குடும்பம் / இயலாமை / பிஸி / வயது போதாது / அனுபவம் போதாது என்ற கர்த்தருடைய ஊழியன் என்கிற பெயரில் பிடித்ததும் வசதியுமான தர்ஷீஷிக்குள் ஓடி தஞ்சம் கொள்ளகூடாது.

கடல் கொந்தளித்து, புயல் அடித்து, ஆதரித்தவர் அனைவரும் சேர்ந்து – கடலில் தூக்கி போடுவதற்கு முன்னும் மீன் சுவாசத்தில் வாழ துவங்குவதற்கு முன்னும் - நமக்கு ஒப்புவிக்கப்பட்ட கடமையை செய்ய முற்படுவோம்.

நம்மை புதிய வஸ்திரம் உடுத்தி அங்கீகரித்து அலங்கரித்து ஆசீர்வதிக்க வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார். லூக்கா 15:20-22

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக