#119 - *ஞானஸ்நானம் பெறாத சகோதரிகள் சபையில் முக்காடு போட வேண்டாமா?*
*பதில்* : முக்காடு என்பது - தான் ஒரு தலைமைக்கு உட்பட்டவள் அல்லது கீழ்பட்டவள் என்பதை காண்பிக்கும் ஒரு செயல்.
பெண்ணுக்கு ஆண் தலை.
ஆணுக்கு கிறிஸ்து தலை.
கிறிஸ்துவிற்கு பிதா தலை. 1கொரி. 11:3
தலையை விரித்துப்போட்டுக்கொண்டு தான்தோன்றித்தனமாக திரியும் எவரையும் - உன்னை கேள்வி கேட்பார் இல்லையோ என்ற வழக்க சொல் உண்டு.
சபை கூடியிருக்கும் போது – பிதாவும் கிறிஸ்துவும் மகிமைபடவேண்டும். மொட்டையடித்துக் கொண்டதாலோ வழுக்கையை மறைக்க வேண்டும் என்பதாலோ மற்ற எந்த காரணத்திற்காகவும் ஆண்கள் தங்கள் தலையை (கிறிஸ்து) சபை தொழுகையில் மூடக்கூடாது.
அது போல பெண்கள் தங்கள் தலையை (கணவன்/தகப்பன்) சபையில் உயர்த்தக் கூடாது. கிறிஸ்துவே மகிமைபடுகிறார்.
மேலும் இந்த பழக்கம் கலாசாரத்தையும் சார்ந்தது. (1கொரி. 11:16)
முக்காடிட்டு கொள்வது வெட்கமானால் – தலை முடியை ஆண்களை போல குறைத்து கொள்ளுங்கள் என்கிறார் பவுல் (1கொரி. 11:6)
எல்லா பெண்களும் தங்கள் தலையை மூடிக்கொண்டிருக்க – ஒருவர் மாத்திரம் மூடாமல் இருந்தால் – அது இறுமாப்பை காண்பிக்கிறது.
அதே வேளையில் எந்த பெண்ணுமே தன் தலையை மூடாமல் இருக்கும் போது – ஒருவர் மாத்திரம் மூட வேண்டும் என்று தன் தலையை மூடினாலும் – தன் இறுமாப்பை வெளிப்படுத்துகிறது !!!
கிறிஸ்துவின் நாமத்தில் கூடும் எந்த இடத்திலும் தேவ தூதர்களும் நம் தொழுகையை ஆர்வத்தோடு பார்க்கிறார்களாம் (1பேதுரு 1:12)
நம் தாழ்மையை அவர்கள் தேவனிடத்தில் சாட்சியாக அறிவிக்கிறார்கள் என்று பார்க்கிறோம். (சங். 138:1; 1தீமோ. 5:21; 1கொரி. 4:9; பிர. 5:6)
கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார வசனங்களை வேதாகமத்திலிருந்து வாசிக்க தவற வேண்டாம்.
ஜெபத்தில் பவ்யமாக முக்காடு போட்டுக்கொண்ட போதும்,
வீட்டில் உள்ள கணவனுக்கோ தகப்பனுக்கோ கீழ்படியாமல் இருப்பவர்கள் – முக்காட்டின் அவசியத்தையும் அர்த்தத்தையும் உணராதவர்களும், சத்தியத்திற்கும் கீழ்படியாதவர்களுமானவர்கள்.
தனது முகம் மக்கள் பார்க்கமுடியாத அளவிற்கு பிரகாசமாய் இருந்ததால், நியாயப்பிரமாணத்தை வாசிக்கும்போது மோசே தன் முகத்தின்முன்பு திரை (முக்காடு) போட்டுக்கொண்டார். அந்தப் பழக்கமாக பழைய ஏற்பாடு வாசிப்பவர் (பிரசங்கியார்) முகத்தின் முன்பு திரை (முக்காடு) போட்டுக்கொண்டனர்.
பார்வையாளர்களோ இஸ்ரவேல் மக்களோ அல்ல அவ்வாறு முக்காடு போட்டுக்கொள்ளவில்லை. அந்த பழக்கமும் புதிய ஏற்பாடு வந்தபோது நீக்கப்பட்டது.
புதிய ஏற்பாட்டின் காலத்தில் வேதம் வாசிக்கும்போது பிரசங்கியார் அல்லது வேதம் வாசிப்பவர் முகம் பிரகாசம் அடைவதும் இல்லை அதற்காக அவர் திரை (முக்காடு) போடவேண்டிய அவசியமும் இல்லை. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒளியை தேவன் இருதயங்களில் பிரகாசிக்கப்பண்ணுகிறார், 2கொரி. 4:6. ஆகவே சபையில் பெண்கள் முக்காடு போடுவதற்கு இந்த வசனக்குறிப்பை ஒப்பிடுவதும் சரியானதல்ல.
இதை குறித்த வேத வகுப்பின் என்னுடைய வீடியோ பதிவின் லிங்க் கீழே உள்ளது. https://youtu.be/aNKlmb2mdmc
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக