சமாதானத்தின் தேவன் நம் ஒவ்வொருவரையும்
ஆசீர்வதிப்பாராக.
எவ்வளவு பணம் இருந்தாலும், கண்ணை மூடினதும்
தூக்கம் வரவேண்டும் என்றால் சமாதானம் அவசியம்.
தூக்கம் இன்மை யாருக்கும் நிம்மதி இருக்காது.
சங் 127:2 நீங்கள் அதிகாலையில் எழுந்து,
நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச்
சாப்பிடுகிறதும் விருதா (வீண்); *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு
நித்திரை அளிக்கிறார்*. என்கிறார் சங்கீத ஆக்கியோன்.
சமாதானத்தை குலைப்பதில் பிசாசு வல்லவன்.
கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்குள்ளே, சபையாருக்குள்ளே, சமுதாயதிற்க்குள்ளே என்று எல்லா
வகையிலும் பிரச்சனைகளை தூண்டுவான்.
*சுயமும் கவுரவமும் உறவை “”ஒருநாளும்””
சீர்படுத்தாது*. நீடிய பொறுமையும் விட்டுகொடுக்கும் மனபாங்கு
மாத்திரமே உறவை நீட்டிக்கும்.
நான் சரியானவன் என்று சொல்பவர்களுக்கு வேதம்
சொல்வது “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோ 3:10).
இன்று வாரத்தின் முதல் நாள் !!
கர்த்தருடைய நாள் !!
கர்த்தரின் மரணத்தை நினைவுகூறும் நாள்
!!
*Eddy
Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வேத வகுப்பு மற்றும்
தேவ செய்திகள் கேட்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக