சனி, 16 மே, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 16 May 2020


இந்த புதிய நாளிலே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

*மரபணுவில்* உருவாக்கப்பட்ட விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரீர சுக கேட்டை கொண்டு வரும் என்று அஞ்சி தடைசெய்யும்படி பலர் போராடுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக – பார்க்க ஒன்று போல தோன்றும் பண்ணீர் திராட்சை செடியோடு வேப்பம் செடியை செடியை ஒட்டு போட்டால் - அதில் உருவாகும் பழம் சாப்பிட எப்படி இருக்கும்?

இயேசு கிறிஸ்து திராட்சை *செடியாக* இருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் அந்த திராட்சை செடியில் விடும் *கிளையாக* (கொடி) இருக்கிறோம். யோ 15:5

செடியில் இருந்து கிளைகள் (கொடிகள்) துண்டிக்கப்பட்டு விட்டால் – ஓரிரு நாளில் வெட்டப்பட்ட கிளை காய்ந்து செத்துப் போய்விடும். யோ 15:6

அல்லது அந்த கிளையை வேறே செடியோடு ஒட்டு போட்டால் பழத்தின் தன்மை மாறிவிடும்.

சுத்தமான ஞானபாலாகிய தேவ வார்த்தையின்படி செடியாகிய கர்த்தரை நாம் சார்ந்து தோட்டக்காரராகிய பிதாவிற்கு பலனாகிய கனி என்ற உலக ஆத்துமாக்களினாலும் நற்கிரியைகளினாலும் பிதாவை கனப்படுத்தவேண்டும். மத் 5:16, 1கொரி 6:20, 1கொரி 10:31

புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு கிறிஸ்தவ மதக் கொள்கைகளையும் பற்றிக் கொண்டால் மரபணு கிறிஸ்தவர்களாகி வெளிவரும் கனி யாருக்கும் பிரயோஜனமின்றி வீணாக சுட்டெரிக்கப்படும். மத் 7:19, எபி 6:7-8, லூக்கா 3:17

ஞானப்பாலைாகிய சத்தியத்தையும் கிறிஸ்துவாகிய திராட்சை செடியை மாத்திரம் பற்றிக்கொண்டிருக்கிறோமா என்று பிரித்துப் பார்க்கும் அறிவை நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு தந்தருளுவாராக! 2பேது 2:20, 2பேது 1:2, 2பேது 3:18, யோ 17:3, 1யோ 5:20-21

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்... எபி 13:9

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1பேதுரு 2:3

கொடுக்கப்பட்ட குறிப்பு வசனங்களை வேதத்திலிருந்து வாசித்து தியானிக்கவும்.

தேவன் தாமே நம்மை சகல நன்மைகளிலும் நடத்துவாராக.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :

அனைத்து கேள்வி பதிலும் காண:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக