வெள்ளி, 15 மே, 2020

#940 - மத் 6:19-21ல் சொல்லப்படும் மண்ணுலக செல்வம் எது? விண்ணுலக செல்வம் எது?

#940 - *மத் 6:19-21ல் சொல்லப்படும் மண்ணுலக செல்வம் எது? விண்ணுலக செல்வம் எது?*

*பதில்*
மத் 6:19-21 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

மண்ணுலக செல்வம் என்பது : இந்த பூமியில் வாழ்வதற்காக நாம் சேர்க்கும் பணம் / பொருள் / சம்பாத்யம் / பொக்கிஷம் / நகை / வெள்ளி போன்றவைகளைக் குறிக்கிறது.

வசனங்களை வாசித்துப் பார்க்கவும் : யோபு 31:24-28; சங் 39:6, 62:10; நீதி 11:4, 16:16, 23:5; பிர 2:26, 5:10-14; செப் 1:18; லூக்கா 12:21, 18:24; 1தீமோ 6:8-10, 17; எபி 13:5; யாக் 5:1-3; 1யோ 2:15-16

விண்ணுலக செல்வம் என்பது : நம் பெயரில் பரலோக கணக்கில் ஏற்றப்படும் ஆத்துமாக்களின் எண்ணிக்கை, நற்செயல்கள், சுவிசேஷ பணிகள், தேவ மனிதர்களுக்கு உதுவுதல், ஊழியத் தேவைகளில் பங்கெடுத்தல், பரிசுத்தவான்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு உதவுதல், திக்கற்றவர்களுக்கு உதவுதல், உத்தமமாக வாழ்தல் என்று வேதத்தின் சட்டத்திற்கு உட்பட்டு சொல்லப்பட்டவைகளில் ஈடுபடும் போது விண்ணுலக சம்பாத்தியத்தை குறிக்கிறது.

வசனங்களைப் படித்துப் பார்க்கவும் : மத் 19:21; ஏசா 33:6; லூக்கா 12:33, லூக்கா 18:22; 1தீமோ 6:17; எபி 10:34, 11:26; யாக் 2:5; 1பேது 1:4, 1பேது 5:4; வெளி 2:9

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக