வெள்ளி, 15 மே, 2020

#942 - பாஸ்டர் எனப்படுபவர் வயதானவராக இருக்கவேண்டுமா?

#942 - *பாஸ்டர் எனப்படுபவர் வயதானவராக இருக்கவேண்டுமா?* அப்படி என்றால் எத்தனை வயதுக்கு மேல் இருக்க வேண்டும்? வயதானவர் என்றால் இயேசு கிறிஸ்து ஊழியத்தின் போது. வாலிபராக இருந்தாரே?

*பதில்*

மூப்பர்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்ற வார்த்தைகள் அனைத்தும் *ஒரே அர்த்தம்* உடையவை. அப். 20:17; 20:28, 1பேதுரு 5:1-3

புதிய ஏற்பாட்டில் "மூப்பர்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் கிரேக்க வார்த்தையான பிரஸ்ப்யூடெரோஸ்லிருந்து வந்தது.
இது ஒரு வயதான நபரைக் குறிக்கிறது.

எந்த வயதும் வார்த்தையால் வரையறுக்கப்படவில்லை.
இந்த வார்த்தையானது சில நேரங்களில் மற்றவரின் வயதைக் குறிக்கப் பயன்படுகிறது.

*எடுத்துக்காட்டாக* : லூக்கா 15:25ல் - அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; என்ற வசனத்தில் மூத்த குமாரன் (மூப்பர்) என்னும் இடத்தில் பிரஸ்ப்யூடெரோஸ் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது மகன்கள் வயதான ஆண்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் இந்த மகன் மற்றவரை விட மூத்தவர் என்று பொருள் படுகிறது.

இதேபோல், யோவான் 8:9ல், இயேசுவின் கடுமையான கண்டனத்தைக் கேட்டபின் அவர்கள் கூடியிருந்தவர்கள் தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் என்ற வசனத்தைப் பார்க்கிறோம்.

இதிலும் பொியோர் என்ற மூத்தவர்களுடன் (பிரஸ்புடெரோஸ்) ஒப்பிடப்படுகிறது.

1தீமோ. 5:1ம் கவனியுங்கள் – அதே ஒப்புமை கொடுக்கப்பட்டிருக்கும்.

அரசாங்கம் 60 வயதானவர்களை மூத்தவர்கள் என்கிறது. ஆனால் எந்த வயதை அடையும் போது ஒருவர் வயதில் மூப்பர் / பெரியவர் என்று வயதை நிர்ணயிக்கும் வேதவசனங்கள் எதுவும் இல்லை.

அதற்கு பதிலாக, தகுதிகள் குறிப்பிட்ட வயது வரம்பு இல்லாத வயதான ஆண்களை பரிசீலிக்கின்றன.

*இந்த தகுதிகள்*:
"புதியவராக அல்ல" (1தீமோ. 3:6) - ஒரு மூப்பன் ஒப்பீட்டளவில் புதிய கிறிஸ்தவராக இருக்க முடியாது. அவர் 70 வயதாக இருந்தாலும், அவர் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவராக இருந்தால், அவர் ஒரு மூப்பராக தகுதி பெற மாட்டார்.

"ஒரு மனைவியின் கணவன்" (1தீமோ. 3:2; தீத்து 1:6) - மூப்பருக்கு திருமண வயது இருக்க வேண்டும், திருமணமானவராக இருத்தல் அவசியம்.

"தன் பிள்ளைகளை அடிபணிய வைப்பது" (1தீமோ. 3:4 ) - ஒரு மூப்பருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும், மேலும் அவர் தனது பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சிறு குழந்தைகளின் பெற்றோர் நிச்சயமாக ஒரு மூப்பராக தகுதி பெற மாட்டார்கள்.

"உண்மையுள்ள குழந்தைகளைப் பெற்றிருத்தல்" (தீத்து 1:6) - இங்கே பிள்ளைகள் கிறிஸ்தவர்களாகத் தீர்மானிக்கும் அளவுக்கு வயதாகிவிட்டதாகவும், கிறிஸ்தவர்களாக உண்மையை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பொதுவாக டீன் ஏஜ் அல்லது வாலிப வயதை குறிப்பிடுகிறது. ஒரு மூப்பர் எனப்படுபவர் வாலிப வயதான பிள்ளைகளின் பெற்றோராக இருக்க வேண்டும்.

இருபது மற்றும் முப்பதுகளில் உள்ள பெரும்பாலான ஆண்களை இந்த தகுதிகள் ஒருவரை மூப்பராக இருப்பதை அகற்றிவிடுகிறது.  ஆனால் முப்பதுகளின் பிற்பகுதியில் சில ஆண்கள் இந்த தரங்களை பூர்த்தி செய்யக்கூடும்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்தது நியாயபிரமாண காலத்தில். கலா. 4:5
கிறிஸ்தவம் என்ற சபையானது அப் 2ம் அதிகாரத்தில் துவங்கப்பட்டது.

மூப்பர்கள் என்கிற தகுதி சபை நிர்வாகத்தில் வருகிறது. ஆகவே இயேசு கிறிஸ்து 30-33 வயதில் மூப்பர் என்ற கேள்விக்கு இடமில்லாமல் போகிறது.

மேலும், ஊழியம் செய்வதற்கு இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு வயது வரம்பு இல்லை. ஊழியம் செய்வதும் கிறிஸ்துவைக் குறித்துப் பறைசாற்றுவதும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் விழுந்த கடமை. 1பேதுரு 2:9

மூப்பர்கள் என்பவர்கள் சபையின் நிர்வாகத்தையும் சார்ந்தவர்கள்.
அனைத்து மூப்பர்களும் ஊழியர்களாக இருக்க முடியும்.

ஆனால் ஊழியர்கள் மூப்பர்களாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான தகுதி வரம்பிற்குள் வரவேண்டிய அவசியம் உள்ளது.
பாஸ்டர் என்றாலும் பிஷப் என்றாலும் மூப்பர் என்றாலும் கண்காணி என்றாலும் இந்த அனைத்து பதங்களும் ஒரே அர்த்தமுடையதாகையால், பாஸ்டர் எனப்படுபவர் வயதானவராக இருத்தல் அவசியம்.

கிறிஸ்தவ மதத்தினரிடையே இக்காலங்களில் பல சபைகளில் சிறிய வயதுடன் பிரசங்கம் செய்துக் கொண்டிருப்பவரை பாஸ்டர் என்று அழைப்பது வழக்கமாகிப்போனது. பாஸ்டர் என்றால் மூப்பர் என்பதால், மூப்பருக்கான தகுதிகளில் வராத எவரையும் பாஸ்டர் என்று அழைக்கமுடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக