வெள்ளி, 15 மே, 2020

#948 - புறஜாதிகள் என்பவர்கள் யார்?

#948 - *புறஜாதிகள் என்பவர்கள் யார்?*

*பதில்*
இஸ்ரவேலர், யூதரல்லாத மற்ற அனைவரும் – மோசேயின் நியாயபிரமாணத்திற்கு உட்படாதவர்களானதால் அவர்களால் மற்றவர் அனைவரும் புறஜாதியினர் என்று அழைக்கப்பட்டனர். எபே. 2:11-12

இந்த வார்த்தை அவர்களால் இழிவாக பயன்படுத்தப்பட்டது.

புதிய ஏற்பாட்டில், இது கிரேக்கத்திற்கு சமமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த வார்த்தையின் பயன்பாடு கிரேக்க மொழியின் கிட்டத்தட்ட உலகளாவிய தழுவலில் இருந்து எழுந்ததாக தெரிகிறது.

புதிய ஏற்பாட்டில் கிரேக்க வார்த்தையான ஹெலினெஸ், அதாவது கிரேக்கர் (அப். 16:1, 16:3; 18:17; ரோ. 1:14).

பொதுவாக யூதரல்லாத எந்த நாட்டினரையும் குறிக்கிறது.

ரோ. 9:24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.

கலா. 3:8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.

அனைத்து ஜனங்களுக்கும் தேவனே ஆளுகிறவர் - 2நாள. 20:6 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது.

சங். 47:8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

புறஜாதியான நாம் அனைவரும் தேவனுடைய காணியாட்சிக்குப் பாத்திரவான்களாகும்படி கிறிஸ்துவின் சிலுவையானது யூதரையும் நம்மையும் ஒன்றிணைத்தது. எபே. 2:12

யூதரல்லாத புறஜாதியான நம்மை நியாயபிரமாணமானது பிரித்து வைத்தது என்பதை அறியாமல் – சுய லாபத்திற்காக இன்னமும் நியாயபிரமாணத்தை உரிமை கொண்டாடும் கிறிஸ்தவ மதத்தினரின் உபதேசங்கள் அநேகரை கிறிஸ்துவின் பாதையினின்று விலக்கி செல்கிறது. 1தீமோ. 1:7, எபே. 2:15-18

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக