#936 - *ஈராமின் தாய் நப்தலி கோத்திரத்தாளா அல்லது தாண் குமாரத்தியா?*
கீழ் வரும் முரண்பாட்டைப் போல் உள்ள வசனங்களை விளக்கவும்.
1இரா 7:13-14 ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்;
2 நாளா 2:13-14 இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன். அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்;
*பதில்*-
பிறப்பின் படி ஈராமின் தாய் - "தாண் வம்சத்தில் வந்தவள்”.
தீரு நகரத்தில் நப்தலி கோத்திரத்தானை திருமணம் செய்து கொண்டதால் ஈராமின் தாய் – நப்தலி கோத்திரத்து விதவை என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கான தெளிவான ஆதார வசனத்தைக் காணமுடியவில்லை. ஆதி 35:25
தீரு பட்டணம் செல்வத்திலும் திறமையிலும் பேர் பெற்றது. ஏசா 23:8, சகரி 9:3, யோசு 19:29, 2சாமு 24:7, 1இரா 10:11
கவனிக்க வேண்டியது என்னவென்றால் –
ஈராம் தன் தாயின் வழியில் ஒரு இஸ்ரவேலன், நப்தலி கோத்திரத்தான்.
தந்தை வழியில் தீருவின் மனிதர்.
இப்படியாக ஈராம் தீருவின் புத்திக் கூர்மையும் இஸ்ரவேலன் என்ற இருதயத்தோடு தேவனுடைய ஆலயப் பணிகளை செய்யும் பாக்கியத்தை பெறுகிறான்.
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக