#1 - *பாதம் கழுவுதல் நிகழ்வோடு சேர்த்துதான் கர்த்தருடைய பந்தி நடத்தவேண்டும் என்ற உபதேசமும் சில சபைகளில் இருக்கிறதே*. யோவான் 13ம் அதிகாரத்தின் கீழேயுள்ள சில வசனங்கள் ஆதாரமாக சொல்லப்படுகிறது. விளக்கவும்.
*பதில்*:
கிறிஸ்து மரிக்க போகிறார் என்று தெரிந்ததும், அடுத்து யார் பரலோகத்தில் பெரியவனாக இருக்கவேண்டும் என்ற விவாதம் சீஷருக்குள்ளே இருந்தது.தன் அம்மாவையும் சிபாரிசுக்கு கூட்டி வந்து விசாரிக்கின்றனர். (மத். 20:18-28)
அந்த சம்பாஷனைக்கு பிறகு நடந்த சம்பவம் - பஸ்கா / கடைசி பந்தி.
அப்போது, தன்னுடைய செயலால் சீஷருக்குள் யார் பெரியவன் / சிறியவன் என்பதை கிறிஸ்து விளக்குகிறார்.
பரலோகத்தில் பெரியவனாய் இருக்கவேண்டுமெனில் அவனவன் தன்னை தாழ்த்த வேண்டும் என்பதை காண்பிக்கிற விளக்கம் இது.
இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நடந்த கர்த்தருடைய பந்தி நேரங்களில் அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவியதாக எந்த சம்பவத்தையும் செய்ததாக எந்த பதிவும் இல்லை.
ஆகவே, தேவனுடைய தொழுகையில் ஒரு பங்காக இதை நாம் செய்வது இல்லை.
யூத முறைப்படி கிறிஸ்து அவர்களுக்கு காண்பித்த செயல்.
நாமும் இதை செய்ய வேண்டும் என்று கிறிஸ்து விரும்பியிருந்தால் அல்லது கட்டளை கொடுத்து இருந்தால், அப்போஸ்தலர்கள் நமக்கு அதை வலியுறுத்தியிருப்பார்கள்.
கிறிஸ்துவே தன் காலை கழுவியப் பின்னரும் யூதாஸ் மனம் மாறவில்லை !!
கிறிஸ்தவம் என்பது செயலில் அல்ல !! இருதயத்திலும் இருக்கவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக