வியாழன், 30 ஏப்ரல், 2020

#912 - மரித்த பரிசுத்தவான்களும் நமக்காக இயேசுவிடம் பேச முடியும் என்ற எங்களது நம்பிக்கையை விளக்கவும்

#912 - *மோசேயும் எலியாவும் இயேசுவோடு எப்படி பேசமுடிந்ததோ அது போல மரியாளும் மற்ற மரித்த பரிசுத்தவான்களும் நமக்காக இயேசுவிடம் பேச முடியும். ஆகவே கத்தோலிக்கர்கள் பரிசுத்தவான்களிடம் ஜெபிக்கிறோம். - இது சாத்தியமா என்று விளக்கவும்*

*பதில்*
வழக்கமான மரணத்தை எலியா காணவில்லை. நேரடியாக தேவன் எடுத்துக்கொண்டார்.  2இரா. 2:11

அது போல மோசே மரித்தார் என்று உபா 34:5ல் சொல்லப்பட்டிருந்தாலும் அவருடைய சரீரத்தை தேவன் ஜனங்கள் பார்வையில் காண்பிக்காமல் அவரே அடக்கம் செய்தார்.  உபா. 34:6

அன்பான அப்போஸ்தலனோ,
இயேசுவின் தாயாகிய மரியாளோ
மற்ற அப்போஸ்தலர்களோ;
எலியாவும் மோசேயும் மத் 17:1-3ல் காணப்பட்டது போல வேறு எவரும் மரித்தப்பின் வேதாகமத்தில் இயேசுவோடு காணப்படவில்லை.

ஒருவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதால் சொந்தமாக எப்படிவேண்டுமானாலும் சிந்தித்து கற்பனை செய்துக்கொண்டு நம்பிகொண்டிருப்பதை யாரும் தடுக்க முடியாது. அது அவரவர் உரிமை !!

பிரச்சனை என்னவென்றால்,
நியாயதீர்ப்பின் போது வேத வசனத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை வைத்து தான் நம் செயல்கள் சரிபார்க்கப்பட்டு அதற்கேற்றார்போல் பரலோகமோ நரகமோ (தண்டனையோ விடுதலையோ)  கொடுக்கப்படுவதால் *வேதத்தில் ஆதாரம் இல்லாதவற்றை நம்புவது நம் ஜீவனுக்கே ஆபத்தாக முடிந்து விடலாம்*. யோ. 12:48, ரோ. 2:16, எபி. 12:25.

நமக்காக பரிந்து பேசுகிறவர் *இயேசு ஒருவரே*. எபி. 10:29, 1யோ. 2:1, 1தீமோ. 2:5, எபி. 7:24-25, எபி. 9:24

நம் பாவங்களுக்காக மரித்தவரும் மரணத்தை ஜெயித்தவரும் கிறிஸ்து ஒருவரே. வேறு யாரும் அப்படி நமக்காக மரிக்கவில்லை. ரோ 8:4

நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே பிதாவிடம் ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். எபி. 4:16, யோ. 15:16

ஆகவே, மரியாள் மூலமாகவோ, பேதுரு மூலமாகவோ, யோசேப்பு மூலமாகவோ, பவுல் மூலமாகவோ, நம் முன்னோர்கள் மூலமாகவோ நாம் ஏறெடுக்கும் ஜெபம் போய் சேரும் என்று நம்புவது வேதத்தின்படி தவறு !

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக