#905 - *தன் மனைவிக்கு கூட தெரியாமல் அனனியாவை ஏன் உடனடியாக அடக்கம்
செய்தார்கள்?*
*பதில்*
நாதாபும் அபியூவும் அந்நிய அக்கினியை கொண்டுவந்த போது தேவனால் தண்டிக்கப்பட்டு சடுதியில் மரித்தார்கள்
– லேவி. 10:1-7
தேவனுடைய
தண்டனை அவர்கள் மீது வந்தது என்பதனால் – யாரும் *தலைப்பாகையை அகற்றாமலும் வஸ்திரங்களை
கிழிக்காமலும்* இருங்கள் என்றும் அக்கினிக்காக புலம்பவேண்டும் என்றார் – லேவி. 10:6
அவர்களும்
சாகாதபடிக்கு *ஆசரிப்புக்கூடாரத்தை விட்டு போகவேண்டாம்* என்றார் – லேவி. 10:7
அதாவது
– *தேவனுடைய தண்டனையினால் மரித்தவருக்காக யாரும் புலம்ப வேண்டிய அவசியமில்லை, துக்கம் அநுசரிக்க
அவசியமில்லை என்பதையும் தேவ வைராக்கியத்தையும் காண்பிக்கிறது*.
அதைப்
போலவே அனனியாவின் சம்பவத்திற்கும் நடந்திருக்கலாம். 
மனைவி
வாசலில் வந்து நின்றதுமே பேதுரு அவளிடம் கேட்கும் தொனியை கவனித்தால் விளங்குகிறது.
பேதுரு
அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல்
என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். அப். 5:8
அநுமானமாக
- அனனியா மரணித்த செய்தியை ஒரு தகவலாக அவர் உறவினருக்கு சொன்னாலே போதுமானது என்று
நினைத்திருக்கலாம்.
ஆகவே
சபையின் வாலிபர்கள் உடனடியாக வேலையில் இறங்கியிருக்க வேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக