வியாழன், 2 ஏப்ரல், 2020

#839 - ஆதியாகமம் 1:1க்கும் 1:2க்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க முடியுமா?

#839 - *ஆதியாகமம் 1:1க்கும் 1:2க்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க முடியுமா?*

*பதில்*
பரிணாம காலவரிசை மூலம் வேதத்தை ஒத்திசைக்க முயற்சிக்கும் கோட்பாடுகளில் ஒன்று இடைவெளி கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது (அதாவது, பூமி பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்ற கருத்து).

150 ஆண்டுகளுக்கு மேலான இந்த பார்வை, ஆதியாகமம் 1: 1 மற்றும் 1: 2 க்கு இடையில் ஒரு இடைவெளி இருப்பதாக வாதிடுகிறது.

அவர்களின் கூற்றுப்படி இந்த இடைவெளியில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஆதாமுக்கு முந்தைய மனிதர்கள் கூட வாழ்ந்தனர் என்கின்றனர்.

இன்னும் சிலர், சாத்தானின் எதிர்ப்புகளாலும் அவனுடைய போராட்டங்களாலும் தேவன் அந்த அசல் படைப்பை அழித்தார் என்கின்றனர். ஆகவே, ஆதி 1:2ன் பிற்பகுதியானது  ஒரு மறு உருவாக்கத்தை விவரிக்கிறது என்றும் சொல்கின்றனர்.

ஆனால் இந்த கோட்பாட்டிற்கு வேதத்தில் எந்த அடிப்படையும் இல்லை.

ஆதியாகமம் 1ல் பல முக்கியமான இலக்கணக் கருத்துக்கள் உள்ளன. அவை இடைவெளிக் கோட்பாட்டிற்கு எதிராக போராடுகின்றன.

கீழே உள்ள வசனத்தை தயவுசெய்து கவனிக்கவும்.

(1)
தமிழில் ஆதி 1:2 - பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்

என்று இருந்தாலும்

எபிரேயத்திலும் ஆங்கில வேதத்திலும்
“மற்றும்” / எபிரேயத்தில் “வாவ்” என்றும் தொடங்குகிறது.

இந்த மற்றும்என்ற பதமானது வசனங்களுக்கு இடையில் நீண்ட காலம் இருக்கிறது என்ற கருத்திற்கு எதிராக வாதிடுகிறது.

எபிரேய இலக்கணங்களும் அகராதிகளும் 1:2ஐ ஒரு விளக்கமளிக்கும் பெயர்ச்சொல் பிரிவாக கருதுகின்றன.

இது 1வது வசனத்தின் முக்கிய வினைச்சொல்லுடன் சமகாலத்திய ஒரு நிலையை விவரிக்கிறது (cf. Weston Fields, Unformed and Unfilled, pp. 75-86).

(2)
ஆதியாகமம் 1:26ஐக் கவனியுங்கள். இந்த வசனத்தின்படி - மனிதனுக்கு ஆதிக்கம் இல்லாத பல தலைமுறை உயிரினங்கள், பூமியில் மனிதகுலம் வந்த நேரத்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாகையால் / அழிந்துவிட்டதாகையால் – முதல் இரண்டு வசனத்திற்கும் இடைவெளியில் உயிரினங்கள் இருந்திருக்கும் என்ற கருத்துக்கு இது முரணானதாகுமே !!

(3)
ஆதி 1:31ல் மோசே எழுதினார் “அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என்கிறார்.

படைப்பின் வாரத்தின் முடிவில், தேவன் உருவாக்கிய அனைத்தும் பூமியில் இன்னும் உயிரோடு இருந்தன. மேலும், இது "மிகவும் நல்லது" என்று உச்சரிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே ஒருவேளை காலத்தால் அழிந்தது என்றோ, மரணித்து மறைந்தது என்றோ அல்லது அழிந்தது என்றோ ஆகிய எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.

இந்த குறிப்புகளை கவனமாக நாம் வைத்திருக்கவேண்டிய அவசியம் இக்காலங்களில் உள்ளது.

இடைவெளி கோட்பாடு என்ற அந்த கருத்திற்கு உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக