#838 - *சர்ப்பத்தை பயன்படுத்த என்ன காரணம்?*
1) யாத். 4:3 - மோசேக்கு
தேவன் கொடுத்த முதல் அற்புதம் சர்ப்பம்.
2) எண். 21:8லும் வாதையை நிறுத்த
தேவன் ஒரு கொள்ளிவாய் சர்ப்பத்தையே வைக்க சொல்லுகிறார்.
எதனால் சர்ப்பத்துக்கு பதிலாக மற்ற விலங்குகளை பயன்படுத்திவில்லை? சர்ப்பத்தை பயன்படுத்த என்ன காரணம்?
*பதில்*
1) ஒரு
பெரிய பொறுப்பை கையாளப்போகும் மோசேக்கு தன் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு
நிகழ்வாக இது இருந்திருக்கும்.
எகிப்தியர்களின்
பிரதான தெய்வங்களில் ஒன்று சர்ப்பம். ஒவ்வொரு பார்வோனின் வம்சத்திலும் அரச மற்றும்
தெய்வீக சக்தியின் அடையாளமாக இருந்தது.
மோசேயின்
தடியை கீழே போட்ட பொழுது அது சர்ப்பமாக மாற்றுவது வெறுமனே ஒரு அடையாளமாக அல்ல அது விரைவில்
நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது என்றே அறிவுறுத்தப்படுகிறது. அதாவது எகிப்தின்
ராஜாவாகிய பார்வோனையும் எகிப்திய தெய்வங்களுக்கு எதிரான வெற்றியின் உறுதிமொழியின்
பிரதிநிதித்துவமும்!
2) கொள்ளிவாய்
சர்ப்பத்தை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் இங்கு வேறே சம்பவத்தின் அடிப்படையில் வந்தது.
கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும்.
(இஸ்ரவேல்
ஜனங்கள்) அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும்
மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப்
பிரயாணம்பண்ணினார்கள்; *வழியினிமித்தம் ஜனங்கள்
மனமடிவடைந்தார்கள்*.
ஜனங்கள்
தேவனுக்கும் மோசேக்கும் *விரோதமாகப் பேசி*: நாங்கள் வனாந்தரத்திலே
சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும்
இல்லை, தண்ணீரும் இல்லை; *இந்த
அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது* என்றார்கள்.
அப்பொழுது
கர்த்தர் *கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை* ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; *அவைகள்
ஜனங்களைக் கடித்ததினால்* இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். எண். 21:4-6
*அதை
தொடர்ந்து நடந்தது*
:
அதினால்
ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் *கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப்
பேசினதினால் பாவஞ்செய்தோம்*;
சர்ப்பங்கள் எங்களைவிட்டு
நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். எண். 21:7
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு *கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின்* உருவத்தைச்
செய்து, அதை
ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை
நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை
உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச்
சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். எண். 21:8-9
ஆகவே
நீங்கள் குறிப்பிட்ட இந்த இரண்டு சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக