வியாழன், 2 ஏப்ரல், 2020

#835 - எகிப்து தேசத்திலிருந்து கானானுக்கு அழைத்துச் சென்றதே சந்தோஷமாய் அவா்கள் வாழத்தான் ஆனால் இந்த வசனம் அவா்களுக்கு குஷ்டரோகத்னத வரப்பண்ணினால் என்பது தீங்கைக் குறிக்கிறதே

#835 - *எகிப்து தேசத்திலிருந்து கானானுக்கு அழைத்துச் சென்றதே சந்தோஷமாய் அவா்கள் வாழத்தான் ஆனால் இந்த வசனம் அவா்களுக்கு
குஷ்டரோகத்னத வரப்பண்ணினால் என்பது தீங்கைக் குறிக்கிறதே*
இந்த வசனத்னத விளக்கவும்
 
நான் உங்களுக்கு காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சோ்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு
வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்- லேவி. 14:34


*பதில்*
எந்த  ஆசீர்வாதமும் வேதத்தில் நிபந்தனையுடன் தான் வருகிறது.

ஏதேன் தோட்டத்தில் இருந்தே அதை நாம் காணமுடியும்.

கிறிஸ்து நம் பாவங்கள் அனைத்திற்காக மரித்தாலும் – அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்று அவரின் சத்தியத்தின்படி வாழ்ந்து முடித்தால் மாத்திரமே நித்திய ஜீவன் நமக்கு வாக்களிக்கப்படுகிறது !! எபி 3:14, எபி 3:6, மாற்கு 13:13

அது போல – எகிப்திலிருந்து வந்த புருஷர்கள் மாத்திரம் 6லட்சம் பேர்கள் இருந்த போதும் வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குள் 2 பேர் மாத்தரமே போக முடிந்தது – எண் 14:30, 38, 26:35, எண் 32:11-12

மோசே உட்பட அனைவரும் உள்ளே போகமுடியாத காரணம் *கீழ்படியாமை ஒன்று மாத்திரமே* !!

ஆம் - தேவனிடத்தல் கீழ்படிதல் மிக மிக மிக அவசியம்.
அவர் சொன்னதை *அப்படியே* - மறுபடியும் வலியுறுத்துகிறேன் *அப்படியே* செய்ய வேண்டியது நம் வேலை !! எந்த சிறு மாற்றத்தையும் அவர் அங்கீகரிகவில்லை என்பது திண்ணம்.

நெருப்பு தானே – எங்கிருந்து எடுத்தால் என்ன என்று உபயோகப்படுத்தினால் கொண்டுவந்தவர்கள் எரிந்து போனார்கள் – லேவி 10:1-2

ஏற்கனவே அடிக்கசொன்ன ஞாபகத்தில் அடுத்த தடவையும் பேசுவதற்கு பதிலாக பழக்கத்தில் அடித்த மோசேக்கும் தண்டிக்காமல் தேவன் விடவில்லை – எண் 20:11-12, 20:8, யாத் 17:6

கிறிஸ்தவர்களாகிய நாம் கிருபையின் காலத்தில் வாழ்வதால் –  அவரவர் இஷ்டத்திற்கு தங்கள் முறையின்படி தேவனை பின்பற்றினாலும், கடைசியில் வேதத்தை வைத்து தான் நியாயந்தீர்ப்பார் (யோ 12:48) என்பதால் நாம் அந்த வகையை மாத்திரமே பின்பற்ற வேண்டியது மிக மிக மிக முக்கியம்.

பழைய ஏற்பாட்டில் அடி விழுந்தபோது பலருக்கு உடனடியாக திருத்திக்கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த கிறிஸ்துவின் காலத்திலோ – நாம் செய்து கொண்டிருப்பது சரியா தவறா என்று நமக்குள்ளே எவ்வளவும் வாதிட்டு ஒருவரை ஒருவர் ஜெயித்துக்கொள்ளலாம் – ஆனால் தேவன் முன்பு வேதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது நம் செயல் தவறு என்று ஊர்ஜீதமானால் மனந்திரும்ப அங்கு வாய்ப்பு இல்லை என்பதை மனதில் கொண்டு – வசனத்தை *அப்படியே* - *அப்படியே* கடைபிடிக்கவேண்டும்.

குழந்தை ஞானஸ்நானம் துவங்கி ஆராதனையில் ஆட்டம் போடும் பழக்கம் வரைக்கும் புதிய ஏற்பாட்டை ஒப்பிட்டு பார்த்து எதை விடவேண்டும் எதை பற்றிக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுத்தேற இன்றும் காலம் இருக்கிறது !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் : 
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக