#834 - *வேதத்தில் அதிகமாக இந்த மரங்களின் பெயர்கள் சீத்திம், கொப்பேர்,
கர்வாலி, ஒலிவ மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைகளின் விசேஷித்த தன்மைகள் என்ன?*
*பதில்*
தேவனுடைய
மகத்துவங்களை காண இரு கண்களும் போதாது – 2இரா. 6:17
பகலிலும்
இரவிலும் வானத்தை எப்பொழுது பார்த்தாலும் தேவனுடைய மகத்துவத்தை துளியாவது நாம்
புரிந்து கொள்ளமுடியுமோ ?
சங். 150:1
என்
சிறு வயதில் இருந்தே இந்த பழக்கம் எனக்கு உண்டு. வானத்தை அண்ணாந்து பார்ப்பதில்
உள்ள நாட்டம் சொல்லமுடியாது.
அது
போலவே - தேவன் தம்முடைய மகத்துவத்தின் ஒரு துளியை காடுகளிலும் வைத்திருக்கிறேன்
என்கிறார். வசனங்கள் கீழே:
உன்
தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத்
துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
யாக்கோபு
என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின்
பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
இதோ, போரடிக்கிறதற்கு
நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு
ஒப்பாக்கிவிடுவாய்.
அவைகளைத்
தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று
அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து,
இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்.
சிறுமையும்
எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி,
அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால்
வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து,
இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
உயர்ந்த
மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத்
தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,
*வனாந்தரத்திலே
கேதுருமரங்களையும்,
சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும்,
ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே
தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.
கர்த்தருடைய
கரம் அதைச் செய்தது என்றும்,
இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்*. ஏசா. 41:13-20
பல
வருடங்களாக நின்று கொண்டிருக்கும் ஒரு மரத்தின் அருகாமையில் போய் நிற்கும் போது –
என்ன விதமான எண்ணங்கள் நமக்கு வரும்?
எப்படி ஒரு சிறு விதையிலிருந்து வளர்ந்தது?
எப்படி
இது உருவாகிறது?
எப்படி
வளர்கிறது?
எவ்வளவு
ஒடிந்தாலும் மேலோங்கி எப்படி சென்றது?
எத்தனை
காலங்கள் இரவும் பகலும் மழையும் வெயிலும் அரிவாள் வெட்டும் கிளை ஒடிக்கப்பட்டாலும்
திரும்பவும் முளைத்து எழும்பியது என்று தோன்றுமே?
இந்த
கேள்வியெல்லாம் ஒரு பப்பாளி மரத்தையோ முள் மரத்தையோ பார்த்தால் வராது... மகிமையாய்
வளர்ந்தோங்கி நிற்கும் இப்படிபட்ட மரங்களை காணும்போது – குறிப்பாக நம் ஊர்களின்
பனை மரம், சந்தன மரம், பலா மரம், ஆலமரங்களை
காணும்போது தோன்றும்.
மரங்கள்
தேவனுடைய மகத்துவத்தை பிரதிப்பலிக்கிறது !! ஏசா. 60:13, ஏசா. 55:13, ஓசியா 14:8-9
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக