#833 - *பெயெர்செபா என்ற பெயர் ஆணையிட்டு கொண்டபடியால் வந்ததா?*
துரவு வெட்டி தண்ணீர் கண்டதினால் வந்ததா?
ஆதியாகமம் 21:31 அவர்கள் இருவரும் அவ்விடத்தில்
ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது.
ஆதியாகமம் 26:32. அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள்
துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம்
என்றார்கள்.
ஆதியாகமம் 26:33. அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால்
அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
*பதில்*
பெயர்செபா
என்றால் "சத்தியத்தின் கிணறு" என்று பொருள்.
வாக்குத்தத்தத்தின்
பூமி என்று அழைக்கப்பட்டதன் தென் பகுதியின் எல்லை இது.
"தாண்
முதல் பெயர்செபா வரை" (1நாளா. 21:2;
2சாமு. 24:2-7)
பெலிஸ்தியர்களின்
ராஜாவாவிற்கும் ஆபிரகாமுக்கும் இடையிலான சமாதான உறுதிமொழியிலிருந்து அவ்வாறு
அழைக்கப்பட்டது (ஆதி. 21:31)
இதே
கிணற்றை ஈசாக்கு கண்டுபிடித்தார் – ஆதி. 26:18
ஆபிரகாமிற்கும்
அபிமெலேக்கிற்கும் இடையில் செய்யப்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு ஈசாக்கின் ஊழியர்களால்
இது கண்டுபிடிக்கப்படுகிறது.
நிகழ்வுகளின்
தொடர் ஈசாக்கின் மனதில் அசல் பெயரையும் பெயருக்கு வழிவகுத்ததையும்
நினைவுபடுத்துகிறது; எனவே அவர் கிணறு மற்றும் பெயர் இரண்டையும் மீட்டெடுக்கிறார்.
மேலும்
வேதத்தில் பல இடங்களில் பெயர்செபா குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தினத்தின்
தெற்குபகுதியின் ஒரு நகரம் – நியா. 20:1
ஆபிரகாம்
வசித்த போது பெயரிட்டார் – ஆதி. 21:31-33;
22:19
ஈசாக்கு
வசித்த இடம் – ஆதி. 26:23
எகிப்துக்குப்
பயணம் செய்யும் போது யாக்கோபால் தேவனுக்கு பலியிடப்பட்ட இடம் – ஆதி. 46:1
யூதாவிற்கு
சுதந்தரமாக கொடுக்கப்பட்ட இடம் – யோசு. 15:20;
15:28; 2 சாமு. 24:7
பின்னர்
சிமியோனுக்கு ஒதுக்கப்பட்டது – யோசு. 19:2;
19:9; 1நாள. 4:28
சாமுவேலின்
இரண்டு மகன்களும் நியாயந்தீர்த்த இடம் - 1 சாமு. 8:2
விக்கிரகாராதனை
வழிபாட்டின் இடமாக மாறியது – ஆமோஸ் 5:5;
8: 4
இந்த
இடம் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு ஆகியோருக்கு சொந்தமானது
ஆதி.
21:25-26
ஆகார்
கிணற்றைப் கண்ட இடம் – ஆதி. 21:14-19
ஒரு
தூதன் எலியாவுக்கு உணவளித்த இடம் - 1 இரா. 19:3-7
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக