புதன், 1 ஏப்ரல், 2020

#832 - இயேசு சிலுவையில் மரித்து சாபங்களை எடுத்த பின்னரும் ஏன் பிரசவ வலி?

#832  - *இயேசு சிலுவையில் மரித்து சாபங்களை எடுத்த பின்னரும் ஏன் பிரசவ வலி?*

ஆதாம் ஏவாள் பாவம் செய்தார்கள் அதினால் தேவன் சபித்தார் உலகில் சாபம் வந்தது. இயேசு சிலுவையில் மரித்தார் நம்முடைய சாபங்களை அவர் சுமர்ந்து  தீர்த்தார். அப்புறம் ஏன் இன்று வரை: 

1-பெண்களின் பிரசவலி கொடுமையாக உள்ளது
2-ஆண்கள் நெற்றி வியர்வை சிந்துகிறர்கள்?

*பதில்*
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது தேவனுடைய நேரடி உறவை இழந்தார்கள். ஆதி. 2:15, 19, 21, 22, ஆதி. 3:9

மீறினால் சாகவே சாவாய் என்று சொல்லப்பட்டும் அதை மீறினார்கள் – மரித்தார்கள் (ஆவியில் தேவனோடு உள்ள உறவில் மரித்தார்கள்) அதன் பலனாக பூமியில் கஷ்டங்களையும் விளைவையும் பெற்றுக்கொண்டார்கள். ஆதி. 2:16-17, ஆதி. 3:16-19.

பாவத்தால் ஏற்பட்ட அந்த பிரிவை நீக்க ஒருவரை அனுப்புவதாக தேவன் வாக்களித்தார் – ஆதி. 3:15

அதை பூரணப்படுத்தும்படியாக, நீங்களும் நானும் ஒரு ஆணின் வித்தினால் பிறந்தது போல கிறிஸ்து பிறக்காமல் – ஸ்திரீயின் வித்தாக பிறந்தார் – ஏசா. 7:14

பாவம் செய்த ஆத்துமா சாகிறது – எசே. 18:4

நிரந்தரமான பாவ நிவிர்த்தியாக ஒரே தரமாக பாவமில்லாத பரிசுத்தமான இயேசுவின் இரத்தம் முழுவதுமாக சிலுவையில் சிந்தப்பட்டு ஒரே ஜீவாதார பலியாக பாவநிவாரண பலியாக ஏறெடுக்கப்பட்டது – 1யோ. 1:7, எபி. 10:4, எபி. 9:14, எபே. 5:2, ரோ 3:26, ரோ. 8:3

கிறிஸ்துவானவர் இந்த உலகத்தில் வந்து மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஏற்பட்டதான இடைவெளியை நீக்கும்படி பாலமாக அமைந்தார் – 1தீமோ. 2:5, 1தீமோ. 1:15

மனிதகுலத்திற்கும் பிதாவினிடத்திற்கும் ஏற்பட்ட பிளவை நீக்கும்படியான ஒரே பாலமாக இயேசு கிறிஸ்து இருக்கிறார் – யோ. 14:6

நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்குப் பிழைக்கும்படி அவர் தானே தம்முடைய சிலுவையில் நம்முடைய பாவங்களை சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானோம் – 1பேதுரு 2:24

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; ஏசா. 53:4

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்தார்.. ஏசா. 53:12

பாவத்தை அகற்றினார் என்பதை நாம் உணராமல் நோய்களுக்கும் வேதனைகளுக்கும் நேராக நம் சிந்தையை வைத்தால் நாம் புரிந்து கொள்ளவேண்டியவை கீழே :

மத். 8:17ல் அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால்  (53:4) உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று பார்க்கிறோம்.

அதாவது இந்த வசனத்தில் உள்ளதைப் போல, இயேசு கிறிஸ்துவானவர் அனைவரது “நோய்களையும்” தானே ஏற்றுக்கொண்டு நோயுற்றவர்களின் இடத்தில் நோய்வாய்ப்பட்டார் என்றோ அல்லது தொழுநோயாளியின் இடத்தில் குஷ்டரோகியாக மாறினார் என்றோ அல்ல.

அதற்கு முந்தைய வசனத்தில் கவனிக்கும் போது – மத். 8:16ல் அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார் என்று பார்க்கிறோம்.

ரோ. 5:10-12ல்  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.  அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று என்கிறார் பவுல்.

இந்த சரீரம் மண்ணுக்குறியது. அந்த மண் சபிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து மண்ணை அல்ல ஆத்துமாவை இரட்சிக்கும்படி வந்தார். ஆத்துமாக்களை திரும்பவும் பிதாவிடம் கொண்டு செல்லும்படி வந்தார்.
வியாதியும் வியர்வையும் சரீரத்திற்குறியது. மரணமும் வேதனையும் வியர்வையும் உழைப்பும் இந்த பூமிக்குரியது. சாகவே சாவாய் என்று தேவன் சொல்லியிருந்த போது ஆதாம் ஏவாள் அந்த கனியை புசித்தும் உயிரோடு இருந்தார்களே !! தேவன் சொன்ன சாவு – ஆவிக்குரிய மரணம். அந்த மரணத்தை மீட்டெடுக்கு கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். வியாதியும் மரணமும் வியர்வையும் உழைப்பும் – இவ்வுலகத்திற்குரியது.

பவுல் கொரிந்து பட்டணத்திற்கு இவ்வாறு எழுதுகிறார்:
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.  நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;  துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன் செய்கிறது. விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். 2கொரி. 4:7-13

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1கொரி. 15:19

இவையெல்லாம் கிறிஸ்துவின் வருகையில் தான் நிறைவுக்கு வரும் !!

யோவான் நமக்கு இப்படியாக தெரிவிக்கிறார்:
பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.  அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. வெளி. 21:3-4

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக